IND vs AUS : அப்றம் என்னப்பா ஐபிஎல் வந்துருச்சு, எல்லாரும் மறக்காம அதுல விளையாடுங்க – இந்திய அணியை விளாசும் முன்னாள் வீரர்

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற்று அசத்தியது. இருப்பினும் அடுத்ததாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியாவை 2வது போட்டியில் ஆஸ்திரேலியா அடித்து நொறுக்கி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சென்னையில் நடைபெற்ற 3வது போட்டியிலும் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

IND vs AUS ODI

- Advertisement -

குறிப்பாக 2019க்குப்பின் தொடர்ந்து 4 வருடங்களாக 26 தொடர்களில் சொந்த மண்ணில் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்து ஆஸ்திரேலியா அசத்தியுள்ளது. அதை விட சமீபத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்தை தோற்கடித்து உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியாவுக்கு தோல்வி பரிசளித்த ஆஸ்திரேலியா ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணி என்ற அந்தஸ்தையும் தன்வசமாக்கி சாதனை படைத்துள்ளது. மறுபுறம் உலககோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கு எதிராக இப்படி சொதப்பலாக செயல்பட்டு தோல்வியை சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் விளையாடுங்க:
குறிப்பாக அதிரடியாக செயல்பட வேண்டிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியது, முக்கிய நேரத்தில் ஃபீல்டர்கள் கேட்ச்களை தவற விடுவது, 2வது போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடிக்கும் அளவுக்கு பவுலர்கள் திணறியது என சமீபத்திய உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த பாடங்களிலிருந்து இந்தியா எந்த முன்னேற்றத்தையும் காணாமல் இத்தொடரில் தோற்றது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக 2023 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு அனைத்து இந்திய வீரர்களும் தயாராகிவிட்டனர்.

MI V DC IPL 2022

ஆனால் உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் இந்த தொடரில் சந்தித்த தவறுகளையும் தோல்விகளையும் மறந்து விடாமல் ஐபிஎல் தொடரில் விளையாடுங்கள் என்று இந்தியாவை எச்சரிக்கும் சுனில் கவாஸ்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “முக்கிய நேரத்தில் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள் சிங்கிள் கூட எடுக்காமல் தடுமாறியதால் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டது. அது போன்ற நிலைமைகளில் நீங்கள் வழக்கத்திற்கு மாறாக விளையாட முயற்சிக்க வேண்டும். இதில் இந்தியா சற்று கவனம் செலுத்த வேண்டும்”

- Advertisement -

“ஆனால் தற்போது ஐபிஎல் துவங்க உள்ளது. அதன் காரணமாக இந்த தவறுகளை மறந்து விடாதீர்கள். ஏனெனில் சில நேரங்களில் இந்தியா செய்த தவறுகளை மறந்து தவறு செய்கிறது. ஆனால் இந்த தவறை மறக்க கூடாது. ஏனெனில் விரைவில் நடைபெறும் உலக கோப்பையில் நாம் மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளலாம். பொதுவாக நீங்கள் 270 முதல் 300 ரன்கள் துரத்தும் போது குறைந்தது ஒரு 90 அல்லது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தால் மட்டுமே இலக்கை நெருங்க முடியும். இப்போட்டியில் அது நடைபெறவில்லை”

“கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஆனால் நீங்கள் அதைப் போல பெரிய பார்ட்னர்ஷிப் உருவாக்கியிருக்க வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலியாவின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. அவர்களுடைய பந்து வீச்சும் ஸ்டம்ப் லைனில் குறி வைத்து சிறப்பாக இருந்தது. எப்படி பார்த்தாலும் அவர்களுடைய அபார ஃபீல்டிங் தான் இறுதியில் இந்த போட்டியில் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : இந்தியாவில் எப்போவுமே இது சவால் தான். வெற்றிக்கு பிறகு – ஆட்டநாயகன் ஆடம் ஜாம்பா பேட்டி

அவரை போலவே தரமான பேட்ஸ்மேன்கள் இருந்தும் 270 ரன்களை சேசிங் செய்யாமல் சுமாராக செயல்பட்ட இந்திய வீரர்களை விளாசும் ரசிகர்கள் பேசாமல் அனைவரும் போய் 2023 ஐபிஎல் தொடரில் உங்களது அணிகளுக்காக பணத்துக்காக உயிரை கொடுத்து விளையாடுங்கள் என்று சோகத்தில் சரமாரியாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement