IND vs AUS : இந்தியாவில் எப்போவுமே இது சவால் தான். வெற்றிக்கு பிறகு – ஆட்டநாயகன் ஆடம் ஜாம்பா பேட்டி

Adam-Zampa
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பாக பந்துவீசிய பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆசத்தினர்.

IND-vs-AUS-1

- Advertisement -

பின்னர் 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி இந்த தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக அற்புதமாக பந்துவீசிய அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா 10 ஓவர்கள் வீசி 45 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

Zampa

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தன்னுடைய சிறப்பான செயல்பாடு குறித்து பேட்டியளித்த ஆட்டநாயகன் ஆடம் ஜாம்பா கூறுகையில் : இந்தியாவில் எனக்கு எப்போதுமே நிறைய சக்சஸ் கிடைத்திருக்கிறது. ஆனாலும் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள ஆடுகளங்களில் பந்துவீசுவது என்பது ஒரு பெரிய சவால் தான்.

- Advertisement -

அதனை எதிர்கொண்டு நான் சிறப்பாக செயல்பட்டதாகவே நினைக்கிறேன். என்னுடன் இணைந்து பந்துவீசிய ஆஸ்டின் அகர் நல்ல போட்டியை தந்தார். போட்டியின் திருப்புமுனையே அவர் எடுத்த அடுத்த அடுத்த விக்கெட்டுகள் தான். எனக்கு முன்னதாக பந்துவீசிய வீரர்களுக்கும் நான் நன்றி சொல்லியாக வேண்டும்.

இதையும் படிங்க : IND vs AUS : சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்து என்ன புண்ணியம், கேரியரின் முதல் தோல்வியால் ரோஹித் வேதனை – காரணம் என்ன

நாங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து எங்களது திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதனாலேயே எங்களால் வெற்றி பெற முடிகிறது என ஆடம் ஜாம்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement