IND vs AUS : சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்து என்ன புண்ணியம், கேரியரின் முதல் தோல்வியால் ரோஹித் வேதனை – காரணம் என்ன

Rohit-Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இழந்த இந்தியா 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது. அதை விட வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. ஆனால் இத்தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா தனது நம்பர் ஒன் இடத்தை ஆஸ்திரேலியாவிடம் தாரை வார்த்து உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

MItchell Starc IND vs AUS

- Advertisement -

முன்னதாக இத்தொடரில் இந்திய பவுலர்கள் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 188 ரன்களுக்கு மடக்கி பிடித்தது இறுதியில் டாப் ஆர்டர் சொதப்பியும் கேஎல் ராகுல் – ஜடேஜா ஆகியோர் போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று கொடுக்க முக்கிய பங்காற்றியது. ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பிய பேட்ஸ்மேன்கள் வெறும் 117 ரன்களுக்கு சுருண்டதால் வெற்றிக்கு போராட எந்த வாய்ப்பையும் பெறாத பவுலர்களை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

என்ன புண்ணியம்:
அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் பந்து வீச்சாளர்கள் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை 49 ஓவரில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினர். ஆனால் ரோகித் சர்மா 30, சுப்மன் கில் 37, விராட் கோலி 54, கேஎல் ராகுல் 32, ஹர்திக் பாண்டியா 40, ரவீந்திர ஜடேஜா 18 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்தாலும் பினிஷிங் செய்யாமல் சுமாரான பேட்டிங்கையே வெளிப்படுத்தினர். மொத்தத்தில் இந்த தொடரில் பவுலர்களை விட தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது.

IND vs AUS ODI

அத்துடன் கேப்டனாக சொந்த மண்ணில் இதுவரை அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 14 தொடர்களில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்த ரோகித் சர்மா முதல் முறையாக இந்த தொடரில் தோல்வியை பதிவு செய்தார். இந்நிலையில் இலக்கு அதிகமாக இல்லாத போதிலும் பிறந்து வளர்ந்த இந்திய மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டதே தோல்விக்கு முக்கிய காரணம் என்று ஒப்புக் கொண்டுள்ள ரோஹித் சர்மா இது பற்றி போட்டியின் முடிவில் ஏமாற்றத்துடன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சேசிங் செய்வதற்கு அது அதிகப்படியான ரன்கள் (270) என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும் 2வது பாகத்தில் பிட்ச் மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்ததாக நான் நினைக்கவில்லை. மேலும் பார்ட்னர்ஷிப் அமைக்கலாம் என்று நாங்கள் நினைத்த போது முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை இழந்தோம். இது போன்ற போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம் என்ற நிலைமையில் அதை நாங்கள் செய்ய தவறி விட்டோம். அதை விட இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்த பிட்ச்களில் சுமாரான ஷாட்களை அடித்து நிறைய பேட்ஸ்மேன்கள் அவுட்டானார்கள்”

Rohit-Sharma

“சில நேரங்களில் அது சவாலாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் உங்களை உட்படுத்திக் கொண்டு விளையாடுவது முக்கியமாகும். இப்போட்டியில் 270 ரன்கள் துரத்தும் போது நாங்கள் பெற்ற நல்ல தொடக்கத்தை முடிந்தளவுக்கு இறுதி வரை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இருப்பினும் நாங்கள் முடிந்த அளவுக்கு முயற்சித்தும் எங்களுக்கு சாதகமாக அது நடைபெறவில்லை. கடந்த ஜனவரி முதல் நாங்கள் விளையாடிய 9 ஒருநாள் போட்டிகளில் நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டுள்ளோம்”

இதையும் படிங்க: IND vs AUS : இவரப்போய் ஏபிடி’யுடன் கம்பேர் பண்றிங்களே, பேசாம அவருக்கு சான்ஸ் கொடுங்க – சூர்யகுமார் மீது ரசிகர்கள் அதிருப்தி

“ஆனாலும் சிலவற்றில் முன்னேற வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. எனவே எதில் முன்னேற வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தொடரில் நாங்கள் இணைந்து தவறுகளை செய்தோம். நிறைய பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். இருப்பினும் வெற்றிக்கு தகுந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியர்களுக்கு பாராட்டுக்கள்” என்று கூறினார்.

Advertisement