IND vs AUS : அஷ்வினை ஏன் ரெகுலரா அசிங்கப்படுத்துறிங்க? உங்களால் இந்தியாவுக்கும் பின்னடைவு – ரோஹித்தை விளாசும் கவாஸ்கர்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற இன்னும் ஒரு வெற்றி அவசியமாகிறது. அந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் மணி நேரத்திலேயே சுழலத் துவங்கிய பிட்ச்சில் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளில் இழந்து வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது.

Umesh Yadav 1

- Advertisement -

அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 26 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் முதல் நாள் முடிவில் 156/4 என்ற நல்ல நிலையில் இருந்தது. முதல் நாளில் ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் எடுத்த நிலையில் நம்பர் ஒன் பவுலராக ஐசிசி தரவரிசையில் முன்னேறிய ரவிச்சந்திரன் அஷ்வின் விக்கெட் எடுக்காமல் இருந்தார்.

அஷ்வினை அவமானப்படுத்தாதீங்க:
அந்த நிலையில் துவங்கிய 2வது நாளில் களத்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் – கேமரூன் க்ரீன் ஆகிய 2 வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் இடது கை ஸ்பின்னர்களான ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை மட்டுமே பயன்படுத்திய ரோகித் சர்மா அவர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை என்ற பரிதாப நிலை ஏற்பட்ட பின்பு தான் சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து அஷ்வினை பந்து வீச அழைத்தார். ஆனால் பந்து வீச துவங்கியதும் அந்த இருவரையும் மிக விரைவாக சொற்ப ரன்களில் அஷ்வின் காலி செய்த நிலையில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்ததார்.

ashwin 2

அதனால் 186/4 என்ற வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை 197 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 2வது இன்னிங்ஸில் 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கியது. அப்போது சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய பேட்ஸ்மேன்களில் புஜாரா மட்டும் நங்கூரமாக நின்று 59 ரன்கள் எடுத்த போதிலும் ரோகித் சர்மா 12, விராட் கோலி 7 என முக்கிய வீரர்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் இந்தியா 163 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 8 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அதனால் 3வது நாளில் வெறும் 75 ரன்கள் என்ற இலக்கை துரத்த காத்திருக்கும் ஆஸ்திரேலியா இப்போட்டியில் வெற்றி பெறுவது 90% உறுதியாகியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் 186/4 என்ற வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை மேற்கொண்டு 11 ரன்களுக்கு சுருட்ட உதவிய அஸ்வின் ஆரம்பத்திலேயே பந்து வீசியிருந்தால் முன்கூட்டியே விக்கெட்டுகள் விழுந்து ஆஸ்திரேலியாவின் முன்னிலை 88 ரன்களை விட குறைவாக இருந்து இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கும் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் இந்திய ஆடுகளங்களில் மிரட்டக்கூடிய அவரை நம்பாமல் தாமதமாக பந்து வீச அழைத்து ரோகித் சர்மா அவமானப்படுத்தியது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

Gavaskar

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “களத்தில் 2 வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் தண்ணீர் இடைவெளிக்கு முன்பு வரை அஸ்வின் பந்து வீச அழைக்கப்படவில்லை. ஒருவேளை அதனால் தான் இடது கை ஸ்பின்னர்கள் பந்து வீசினார்களா? அப்படியானால் இறுதியில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தது யார்? ரவிச்சந்திரன் அஸ்வின். பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பை அவுட்டாக்கிய அவரால் இடது அல்லது வலது கை பேட்ஸ்மேன்கள் என யாராக இருந்தாலும் கவலையில்லாமல் அவுட் செய்ய முடியும்”

இதையும் படிங்க:IND vs AUS : கபில் தேவின் மற்றுமொரு ஆல் டைம் சாதனையை தூளாக்கிய அஷ்வின் ஜாம்பவானாக சாதனை – மேஜிக் நிகழ்த்துவாரா?

“450 விக்கெட்களை எடுத்து மிகச்சிறந்த பவுலராக ஜொலிக்கும் அஸ்வினுக்கு முன்கூட்டியே பந்து வீசும் வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும். குறிப்பாக பிட்ச் சுழன்றாலும் இல்லையென்றாலும் 7வது பேட்ஸ்மனை 3வது இடத்திற்கு மேல் நீங்கள் அனுப்ப மாட்டீர்கள். ஆனால் பவுலர்களில் மட்டும் இப்படி பாகுபாடு பார்ப்பது ஏன்? குறிப்பாக அஸ்வினுக்கு இவ்வாறு தொடர்ந்து நடப்பது ஏன்? அவர் முன்கூட்டியே பந்து வீசியிருந்தால் அந்த எக்ஸ்ட்ரா 20 ரன்கள் மிச்சப்படுத்தியிருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement