பாவம் அவர இவ்ளோ கேவலமா ட்ரீட் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல – ரோஹித், டிராவிட்டை விளாசிய கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் வெறும் கையுடன் வெளியேறியது. குறிப்பாக ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா கொஞ்சம் கூட போராடாமல் மெகா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த தோல்விக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு காரணமாக அமைந்ததை விட தரமான 11 பேர் அணியை தேர்வு செய்யாதது முக்கிய காரணமாக அமைந்தது.

TEam India

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை வீரர்களை அவுட்டாக்கி உலக சாதனை படைத்து தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஷ்வினை ஆஸ்திரேலிய அணியில் 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக இருந்தும் தேர்ந்தெடுக்காத ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருடைய முடிவு தோல்விக்கு நேரடி காரணமாக அமைந்தது. குறிப்பாக கடந்த ஃபைனலில் 2 ஸ்பின்னர்களை தேர்வு செய்தது தோல்விக்கு காரணமாக அமைந்தாலும் இம்முறை போட்டி நடைபெற்ற ஓவல் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின் – ஜடேஜா ஆகிய இருவருமே விளையாட வேண்டுமென சச்சின் முதல் பாண்டிங் வரை இரு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் கேட்டுக் கொண்டனர்.

கவாஸ்கர் வேதனை:
இந்நிலையில் உலகிலேயே தர வரிசையில் நம்பர் ஒன் வீரராக இருப்பவரை ஃபைனலில் கூல்ட்ரிங்ஸ் தூக்க வைத்து மோசமாக நடத்தியது இந்திய அணியாக தான் இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பேட்ஸ்மேனாக இருந்தால் அஸ்வின் இந்த நிலைமையை சந்தித்திருப்பாரா? என்று கேள்வி எழுப்பும் அவர் வெளிநாட்டு மண்ணில் சரிப்பட்டு வர மாட்டார் என்று முந்தைய ரவி சாஸ்திரி – விராட் கோலி கூட்டணி செய்த அதே தவறை ராகுல் டிராவிட் – ரோகித் சர்மாவும் செய்துள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Ashwin

இது பற்றி மிட் டே பத்திரிகையில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை இந்தியா கழற்றி விட்டது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் 5 இடது கை வீரர்களில் ஒருவரான டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக சதமடித்தார். அதே போல் அலெக்ஸ் கேரி 48, 66 என 2 இன்னிங்சிலும் முக்கிய ரன்களை எடுத்தார். குறிப்பாக 2வது இன்னிங்ஸில் வேகமாக ஆல் அவுட் செய்ய இந்தியா முயற்சித்த போது மற்றொரு இடது கை வீரரான மிட்சேல் ஸ்டார்க் உடன் இணைந்த அவர் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்”

- Advertisement -

“ஒருவேளை அஸ்வின் அணியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை யார் அறிவார். அவர் பேட்டிங்கிலும் வெற்றியில் பங்காற்ற கூடியவர். இந்த நவீன கிரிக்கெட்டில் அஸ்வின் போல வேறு எந்த இந்திய வீரரும் இவ்வளவு மோசமாக இந்திய அணியில் நடத்தப்பட்டிருக்க மாட்டார்கள். மேலும் தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருப்பவர் இதற்கு முன் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் மட்டும் ரன்களை அடித்தார் என்பதற்காக நீங்கள் விளையாடும் 11 பேர் அணியில் விடுவீர்களா என்பதை சொல்லுங்கள்? ஆனால் அஸ்வின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் முதல் ஸ்பின்னராக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை”

இதையும் படிங்க:TNPL 2023 : சிஎஸ்கே’வை பந்தாடிய வேகத்தில் திருப்பூரை தெறிக்க விட்ட சாய் சுதர்சன் – சவாலான பிட்ச்சில் முரட்டு அடி

“இதற்காக களத்தில் வலது கை பேட்ஸ்மேன் இருந்ததால் நாங்கள் இடது கை ஸ்பின்னரை தேர்ந்தெடுத்தோம் என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் அஸ்வின் தமது கேரியரில் முழுமையாக இடதுகை பேட்ஸ்மேன்களை மட்டும் அவுட்டாக்கவில்லை. இப்போது மட்டுமல்லாமல் கடந்த காலங்களிலும் நீங்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்திருந்தால் இந்நேரம் அவர் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியிருப்பார். ஒருவேளை இந்த ஃபைனலில் இந்தியா வென்றிருந்தாலும் அஸ்வின் நடத்தப்பட்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் ஆஸ்திரேலியா 444 ரன்களை இலக்கை நிர்ணயித்த போது அவரை கழற்றி விட்டதற்கான சரியான காரணத்தை நீங்கள் சொல்ல முடியாது” என்று கூறினார்.

Advertisement