TNPL 2023 : சிஎஸ்கே’வை பந்தாடிய வேகத்தில் திருப்பூரை தெறிக்க விட்ட சாய் சுதர்சன் – சவாலான பிட்ச்சில் முரட்டு அடி

TNPL 2023 Sai Sudarsan
- Advertisement -

தமிழக இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தில் 2016 முதல் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரின் 2023 சீசன் ஜூன் 12ஆம் தேதியான நேற்று கோயம்புத்தூரில் துவங்கியது. அதில் இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொண்டது. எஸ்என்ஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கோவைக்கு சச்சின் பி 2 (6), சுரேஷ்குமார் 11 (8) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த அரவிந்த் கோல்டன் டக் அவுட்டாகி சென்றார்.

இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் அடுத்து வந்த முகிலேஷ் உடன் கைகோர்த்து அதிரடியாக ரன்களை சேர்த்து சரிவை சரி செய்ய போராடினார். அதில் ஒருபுறம் முகிலேஷ் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்ட சுதர்சன் விரைவாக ரன்களை சேர்த்து கோவையை மீட்டெடுத்தார். குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னைக்கு எதிராக 1 லட்சம் ரசிகர்கள் இருந்த அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் சரவெடியாக விளையாடி 96 ரன்கள் விளாசிய அவர் அதே ஃபார்மில் இந்த போட்டியில் திருப்பூர் பவுலர்களை பந்தாடினார்.

- Advertisement -

மிரட்டல் சுதர்சன்:
அந்த வகையில் 13 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் முகிலேஷ் 33 (32) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அரைசதம் கடந்து தொடர்ந்து வெளுத்து வாங்கிய சுதர்சன் 8 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உட்பட 86 (45) ரன்களை 191.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்டு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவருடன் கடைசி நேரத்தில் கேப்டன் ஷாருகான் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சருடன் 25 (15) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் கோவை 179/7 ரன்கள் எடுக்க திருப்பூர் சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 180 என்ற இலக்கை துரத்திய காரைக்குடி ஆரம்பம் முதலே கோவையின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் வெறும் 109 ரன்களுக்குச் சுருண்டது. குறிப்பாக சத்துர்வேத் 4 (2) வைத்யா 16 (17) விஜய் சங்கர் 2 (3) கேப்டன் சாய் கிஷோர் 1 (4) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹீஜா 33 (33) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அந்தளவுக்கு ஆரம்பம் முதலே பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்டு 70 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்து இத்தொடரை வெற்றியுடன் துவக்கிய கோவை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாருக்கான் 3 விக்கெட்டுகளும் முகமது 2 விக்கட்டுகளும் எடுத்தனர். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 86 (45) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சாய் கிஷோர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக இப்போட்டியில் சாருக்கானை தவிர்த்து 20 ரன்களுக்கு மேல் எடுத்த அனைவரும் 110க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் தடுமாறிய நிலையில் அவர் மட்டும் முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 191.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்தார்.

சென்னையை சேர்ந்த அவர் இதே டிஎன்பிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு வெறும் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டு கிடைத்த வாய்ப்புகளில் 145 ரன்களை அடித்து சாம்பியன் பட்டம் வெல்வதில் பங்காற்றிய நிலையில் இந்த வருடம் 8 போட்டிகளில் 362 ரன்களை குவித்து அசத்தினார்.

இதையும் படிங்க:WTC Final : டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம்பெறாத பிறகு அஷ்வின் வெளியிட்ட – முதல் பதிவு (என்னனு பாருங்க)

குறிப்பாக அழுத்தமான ஃபைனலில் சென்னையை தெறிக்க விட்ட அவர் ஜாம்பவான் சச்சின் உட்பட அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார். தற்போது அதே ஃபார்மில் அதை விட அதிக சம்பளம் (21.6 லட்சம்) வாங்கும் கோவை அணிக்காக இத்தொடரில் முதல் போட்டியிலேயே அசத்தியுள்ள அவர் இந்தியாவுக்கும் விளையாடும் லட்சியப் பயணத்தை வலுவாக துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement