இது தான் உங்க கோச்சிங்கா? அங்க மட்டும் எப்டி நீங்க புலியா பாயுறீங்க – டிராவிட்டை நேரலையில் வெளுத்த கவாஸ்கர்

Rahul Dravid Sunil gavaskar
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக போற்றப்படும் வீரர்களை கொண்டிருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் இந்தியா தோற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை கழற்றி விட்டது தோல்விக்கு முதல் படியாக அமைந்தது.

- Advertisement -

அது போக ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு நேரடியாக ஃபைனலில் களமிறங்கியதால் ஒரு வாரத்திற்கு முன் 4 ஓவர்களை மட்டும் வீசிய இந்திய பவுலவர்கள் திடீரென ஒரே நாளில் 17 ஓவர்களை சோர்வுடன் வீசியதால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு 469 ரன்கள் வாரி வழங்கி பாதி வெற்றியை தாரை வார்த்தனர். எஞ்சிய வெற்றி ஜாம்பவான்களாக போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா மூவரில் யாருமே அரை சதம் அடிக்காததால் பறிபோனது.

கவாஸ்கர் கோபம்:
இருப்பினும் சமீப காலங்களாகவே சொந்த மண்ணில் அசத்துவதும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர்கள் சொதப்புவதும் வழக்கமாகி தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறது. அது பற்றி கேட்ட போது போட்டியின் முடிவில் ராகுல் டிராவிட் பேசியது பின்வருமாறு. “நம்முடைய டாப் 5 வீரர்கள் மிகவும் அனுபவமிக்கவர்கள். சொல்லப்போனால் ஜாம்பவான்களாக கருதப்படும் அவர்கள் தான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர்களை வென்றனர்”

Rahul-Dravid

“ஆனால் தங்களுக்கென்று உருவாக்கியுள்ள உயர்ந்த தரத்திற்கு நிகராக அவர்கள் செயல்படவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதில் நாங்கள் வேலை செய்கிறோம். சில பிட்ச்கள் மற்றும் கால சூழ்நிலைகள் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலாக இருக்கின்றன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் இனிமேலும் நம்மால் டிராவை நோக்கி விளையாட முடியாது. மேலும் இந்தியாவில் வேறு மாதிரியான கடினமான பிட்ச்கள் இருப்பதால் பேட்ஸ்மேன்களின் சராசரி குறைந்துள்ளது. இருப்பினும் பெரிய ஸ்கோர் எடுத்து நம்முடைய பவுலர்கள் போராடுவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

அதை கேட்டுக் கொண்டிருந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய மண்ணில் பேட்ஸ்மேன்கள் புலியாக செயல்படுவதும் வெளிநாட்டு மண்ணில் பூனையாக சொதப்புவதும் தான் உங்களுடைய சிறந்த பயிற்சியா? என்று கடுமையாக விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வீரர்களின் பேட்டிங் சராசரி எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல. நாம் இங்கே இந்திய அணியை பற்றி பேசுகிறோம். இந்திய வீரர்களின் பேட்டிங் சராசரி குறைவதை தடுக்க ஏதேனும் செய்ய வேண்டும். ஏனெனில் அந்த மோசமான பேட்டிங் தான் நமக்கு தோல்வியை கொடுக்கிறது”

Gavaskar

“இது ஏன் நடக்கிறது? இதில் ஏதாவது முன்னேற்றத்தை செய்ய வேண்டும். ஏனெனில் இந்திய மண்ணில் சிறப்பாக பேட்டிங் செய்யும் நீங்கள் “நாங்கள் தான் தாதா” என்று பெருமைப்படுகிறீர்கள். ஆனால் வெளிநாட்டில் மொத்தமாக சொதப்புகிறீர்கள். இந்த பயிற்சியின் நிலை உங்களுக்கு தேவையில்லையா? நீங்கள் தடுமாறும் விஷயத்தில் எந்த அலசலும் செய்வதில்லையா? உங்களைப் பற்றிய சுயமதிப்பீடு முழுமையாக தேவை. பொதுவாக போட்டியில் ஒரு அணி வெல்லும் மற்றொரு அணி தோற்கும் என்பது சகஜமாகும்”

இதையும் படிங்க:WTC Final : நீங்க தோத்தது கூட பரவால்ல ஆனா அதை நினச்சா தான் வேதனையா இருக்கு – சௌரவ் கங்குலி ஆதங்கம்

“ஆனால் நீங்கள் எப்படி தோற்கிறீர்கள் என்பது முக்கியமாகும். இப்படி கொஞ்சம் கூட போராடாமல் தோற்பது நம்மை காயப்படுத்துகிறது. நாங்களும் உங்களது செயல்பாடுகளை பார்த்து பார்த்து நாக் அவுட்டாகி பரிதாபமாக இருக்கிறோம். தற்போதைய நிலைமை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என சொல்ல முடியாது. எனவே இங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும். குறிப்பாக நம்முடைய அணுகுமுறை சரியாக இருந்ததா? தேர்வு சரியாக நிகழ்ந்ததா? என்பதை கம்பளத்தின் கீழ் துலக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement