- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நீங்க விமர்சிப்பதே இந்தியாவின் பணம்.. ஜெய்க்கும் இந்தியாவை குறை சொல்லாம உங்களை பாருங்க.. கவாஸ்கர் விளாசல்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் பாதுகாப்பு காரணங்களால் தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக எல்லைப் பிரச்சினை காரணமாக 2008 முதலே பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா நிறுத்தியுள்ளது.

அதன் காரணமாக இம்முறையும் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாட முடியாது என்று சொல்லி விட்டது. அதனால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. ஆனால் துபாயில் ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே மைதானத்தில், ஒரே பிட்ச்சில் விளையாடுவது இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள சாதகத்தை கொடுப்பதாக மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் ஆகிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் சமீபத்தில் விமர்சித்தனர்.

- Advertisement -

கவாஸ்கர் விளாசல்:

இந்நிலையில் எப்போதும் இந்தியாவை குறை சொல்லும் இங்கிலாந்தினர் தங்கள் அணி 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியிலும் செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியதை பார்க்க வேண்டுமென சுனில் கவாஸ்கர் பதிலடித்துள்ளார். மேலும் இந்தியாவை தொலைக்காட்சியில் விமர்சிக்க இந்த முன்னாள் வீரர்களுக்கு கொடுக்கப்படும் பணம் கூட சர்வதேச கிரிக்கெட்டுக்கு இந்தியா கொடுத்த பணத்தால் கிடைத்தது என்று கவாஸ்கர் சாடியுள்ளார்.

இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “இப்படி பேசுபவர்கள் அனைவரும் ஞானம் மற்றும் அனுபவத்தைக் கொண்டவர்கள் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட நீங்கள் உங்களுடைய அணி செமி ஃபைனலுக்கு வராததைப் பற்றி ஏன் பார்க்கவில்லை? அதையே நான் உங்களிடம் கேட்கிறேன் சார். தொடர்ச்சியாக இந்தியாவின் மீது கவனம் செலுத்தும் நீங்கள் உங்களுடைய சொந்த இடத்தைப் என் பார்ப்பதில்லை?”

- Advertisement -

இந்தியாவின் பணம்:

“நீங்கள் உங்களுடைய நாட்டையும் அணியையும் வெற்றியையும் பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டுக்காக விளையாடினால் பொறுப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் அதில் விட்டு விட்டு அனைத்து நேரங்களிலும் இந்தியாவுக்கு அது கிடைத்தது இது கிடைத்தது என்று தொடர்ந்து பேசுகிறீர்கள். நாம் இதை தவிர்க்க வேண்டும். அவர்கள் பேசட்டும் விடுங்கள். நாம் நம்முடைய கிரிக்கெட்டை கவனம் செலுத்துவோம்”

இதையும் படிங்க: 300 மேட்ச்ன்னா சும்மாவா? இந்திய அணியின் சிறந்த வேலையாள் கோலி இதை செய்ய ஆசை.. வாழ்த்திய ராகுல்

“உண்மையை சொல்லப்போனால் இந்த விஷயத்தை பேசுவதற்கு கூட தகுதியற்றது என்று சொல்வேன். சர்வதேச கிரிக்கெட்டுக்கு இந்தியா என்ன தரம், வருமானம், திறமையைக் கொண்டு வருகிறது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி உரிமை வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு இந்தியா மிகப்பெரிய வருவாய் கொடுக்கிறது. எனவே இந்தியாவை விமர்சிப்பவர்கள் அதற்கான சம்பளத்தை இந்தியா உலக கிரிக்கெட்டுக்கு கொடுப்பதிலிருந்து பெறுகிறோம் என்பதை உணர வேண்டும்” எனக் கூறினார்.

- Advertisement -