இதுல என்ன ஜோக் வேண்டிருக்கு, இஷான் கிசான் சேட்டையை விளாசும் சுனில் கவாஸ்கர் – நடந்தது என்ன

Advertisement

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஜனவரி 18ஆம் தேதியன்று ஹைதெராபாத் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 349/8 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக சாதனை படைத்த சுப்மன் கில் 19 பவுண்டரி 9 சிக்ஸருடன் 208 (149) ரன்கள் குவித்தார்.

IND vs NZ Siraj Bracewell

அதை துரத்திய நியூசிலாந்து ஆரம்பத்திலேயே டேவோன் கான்வே, கேப்டன் டாம் லாதம் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து 131/6 என தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது யாருமே எதிர்பாராத வகையில் 7வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய மைக்கேல் பிரேஸ்வெல் 140 (78) ரன்களும் மிட்சேல் சாட்னர் 57 (45) ரன்களும் விளாசி இந்தியாவுக்கு பயத்தை காட்டி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தனர். அதனால் போராடி வென்ற இந்தியா அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போடுகிறது.

- Advertisement -

விளாசிய கவாஸ்கர்:
முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு 28 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியா ஒரு பந்தை தவற விட்ட போது அது நேராக விக்கெட் கீப்பர் டாம் லாதம் கைகளுக்கு சென்றது. அதை சரியாக ஸ்டம்ப்களுக்கு மேலிருந்து பிடித்த அவர் ஸ்டம்ப்பின் பெய்ல்ஸை நீக்கி அவுட் கேட்டார். அதை சோதித்த நடுவர் பந்து அவரது கைகளுக்கு சென்ற போது பெய்ல்ஸ் நீக்கப்பட்டதாக ஒளிவிளக்குகள் எழுந்ததை ஆதாரமாக வைத்து போல்ட்டானதாக அவுட் கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

Stumping

அதை உடனடியாக அலசி ஆராய்ந்த ரசிகர்களும் வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்களும் முதலில் பந்து ஸ்டம்ப்பில் மோதாமல் டாம் லாதாம் கைகளுக்கு சென்றதையும் அதன் பின்பே அவர் வேண்டுமென்றே வினாடிப் பொழுதில் ஸ்டம்ப்பில் உரசி அவுட் செய்ததையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி 3வது நடுவரை வெளுத்து வாங்கினர். அந்த நிலைமையில் அடுத்ததாக நியூஸிலாந்து பேட்டிங் செய்ய வந்த போது 16வது ஓவரில் களமிறங்கிய டாம் லாதம் குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்தையே அடிக்காமல் தவற விட்டார். அப்போது ஸ்டம்ப்பில் படாமல் வந்த பந்தை பிடித்த இஷான் கிசான் டாம் லாதம் நன்றாகவே வெள்ளை கோட்டுக்கு உள்ளே நின்ற போது ஸ்டம்பில் அடித்து அவுட் கேட்டார்.

- Advertisement -

அதை ஏற்றுக்கொண்ட 3வது நடுவர் சோதித்த போது சம்பந்தமின்றி எதற்கு அவுட் கேட்டார்கள் என்று தெரியாத அளவுக்கு ஒன்றுமே இல்லாமல் இருந்ததால் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். ஆனால் உண்மையாக பாண்டியாவுக்கு எதிராக டாம் லாதம் செய்ததற்கு பழிவாங்கும் வகையில் வேண்டுமென்றே அப்படி செய்ததை பெரிய திரையில் பார்த்த போது இஷான் கிசான் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தார்.

- Advertisement -

அதனால் நிறைய ரசிகர்கள் இது என்ன பழிவாங்கும் செயலா? அப்படி செய்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? என்று இஷான் கிஷானை கலாய்த்தார்கள். அத்துடன் நீங்கள் அவ்வாறு பழி வாங்குவதற்காகவோ அல்லது விளையாட்டாகவோ செய்தது தவறில்லை ஆனால் அதை நடுவரிடம் அவுட் கேட்டு ஏன் நேரத்தை வீணடித்தீர்கள் என்று இஷான் கிசானின் அந்த சேட்டைக்கு முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கண்டிப்பு தெரிவித்தார். குறிப்பாக நியூசிலாந்து கேப்டன் அப்படி செய்ததற்காக நாமும் அப்படி செய்ய வேண்டுமா? அப்படி செய்தால் நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? என்ற வகையில் நேரலையில் வர்ணனையாளராக அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: இவன் எப்போ தான் திருந்துவான்னு தெரில, சதமடித்தும் சுப்மன் கில்லை திட்டிய அவரின் தந்தை – பின்னிணியை வெளியிட்ட இந்திய வீரர்

“நகைச்சுவைக்காக வேண்டுமானால் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்காக அவுட் என்று உறுதியாக நடுவரிடம் நீங்கள் அப்பீல் செய்வது சரியான விஷயம் என்று எனக்கு தோன்றவில்லை. இது போன்ற செயல்கள் சரியான கிரிக்கெட் கிடையாது” என்று கூறினார்.

Advertisement