இவன் எப்போ தான் திருந்துவான்னு தெரில, சதமடித்தும் சுப்மன் கில்லை திட்டிய அவரின் தந்தை – பின்னிணியை வெளியிட்ட இந்திய வீரர்

Shubman Gill Father
Advertisement

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஜனவரி 18ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 349/8 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி கடைசி ஓவர் வரை நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கிய சுப்மன் கில் 19 பவுண்டரி 9 சிக்ஸருடன் 208 (149) ரன்கள் குவித்தார்.

Shubman Gill 1

அதை தொடர்ந்து 350 ரன்களை துரத்திய நியூசிலாந்து டேவோன் கான்வே, கேப்டன் டாம் லாதம் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து 131/6 என தடுமாறியது. அப்போது 7வது விக்கெட்டுக்கு யாருமே எதிர்பாராத வகையில் 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெறித்தனமாக போராடிய மிட்சேல் சாட்னர் 57 (45) ரன்களும் மைக்கேல் பிரேஸ்வெல் 140 (78) ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு அச்சுறுத்தலை கொடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தனர். அதனால் போராடி வெற்றி பெற்ற இந்தியாவின் வெற்றிக்கு இரட்டை சதமடித்து முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

திட்டிய தந்தை:
குறிப்பாக 182 ரன்களில் இருந்த போது பயப்படாமல் சேவாக் போல ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார். சமீப காலங்களாகவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய பேட்டிங் துறையின் வருங்கால சூப்பர் ஸ்டாராக தன்னை அடையாளப்படுத்தி வரும் அவர் கடைசியாக இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் சதமடித்திருந்தார்.

இருப்பினும் அப்போட்டியில் நன்கு செட்டிலாகி 116 (97) ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை பெற்ற அவர் 34வது ஓவரில் அவுட்டான போது “இரட்டை சதமடிக்காமல் இவன் ஏன் அவுட்டானான், இது போன்ற வாய்ப்புகள் எல்லா நேரங்களிலும் கிடைக்காது என்பதால் எப்போ தான் திருந்துவான்” என்ற வகையில் சுப்மன் கில் தந்தை லக்விந்தர் திட்டியதாக இந்திய வீரர் குர்க்ரீட் மன் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த குர்க்ரீட் மன் இந்தியாவுக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சுப்மன் கில் குடும்பத்தின் நண்பராக இருப்பதால் இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடிய 3வது ஒருநாள் போட்டியை சுப்மன் கில் வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்த போது தான் லக்விந்தர் அப்படி திட்டியதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியில் அவுட்டான போது சுப்மன் கில் தந்தை என்னிடம் “சதமடித்த பின்பும் இவன் எப்படி அவுட்டாகியுள்ளான் என்பதை பாருங்கள். அங்கே இரட்டை சதமடிப்பதற்கு தேவையான நேரம் இருந்தும் இப்படி அவுட்டாகியுள்ளான். இது போன்ற நல்ல தொடக்கம் அனைத்து நேரங்களிலும் அவனுக்கு கிடைக்காது. இதை எப்போது தான் அவன் புரிந்து கொண்டு சிறப்பாக விளையாட கற்றுக் கொள்வான்” என்று ஆதங்கத்துடன் கோபத்துடன் தெரிவித்தார்”

“லக்விந்தார் பாஜி எப்போதுமே தனது மகன் சுப்மன் கில் மீது இப்படி அதிகப்படியான எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார். சொல்லப்போனால் அனைவரிடமும் நமது தந்தை இது போல் சிறுவயதிலிருந்தே நம் மீது அதிக எதிர்பார்ப்புகள் வைத்திருப்பார்கள். அந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய சதத்தை இரட்டை சதமாக மாற்றியுள்ளது லக்விந்தார் பாஜியை மகிழ்ச்சியடைய வைக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: IND vs NZ : இறுதிவரை நான் போராடினேன். ஆனாலும் ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சி – மைக்கல் பிரேஸ்வெல் பேட்டி

முன்னதாக கடந்த 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் மறக்க முடியாத காபா வெற்றியை இந்தியா பதிவு செய்வதற்கு 91 ரன்கள் எடுத்த முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் சதத்தை தவற விட்டார். இருப்பினும் வெற்றியின் முக்கிய பங்காற்றிய அவரை இதே போல் அந்த சமயத்திலும் ஏன் சதமடிக்கவில்லை என்று அவர்கள் தந்தை திட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement