சச்சின், கோலி மாதிரி வைபவ் சூர்யவன்ஷியும் இதை நிரூபிக்கணும் – கபில் தேவ் அறிவுரை

Kapil Dev and Sooryavanshi
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது டி20 போட்டியானது ஜூலை 4-ஆம் தேதியானது நாளை நடைபெற இருக்கிறது. இவ்வேளையில் நாளைய இந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி சார்பாக வைபவ் சூர்யவன்ஷி இடம் பெறுவாரா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை கூறிய கபில் தேவ் :

ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் வாய்ப்பினை பெற்ற அவர் சர்வதேச போட்டியில் அறிமுகமாக காத்திருக்கிறார். கடந்த சில போட்டிகளாக வாய்ப்பினை பெறாத அவர் பாரமின்றி தடுமாறும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக விளையாட வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷியின் திறன் குறித்தும் அவரது எதிர்காலம் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் வைபவ் சூர்யவன்ஷி நிறைய விளையாடி இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அவர் மிகப்பெரிய திறமை கொண்டவர் தான் அதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

என்னை பொருத்தவரை தற்போதைக்கு அவருக்கு சரியான காத்திருப்பு நேரம் தேவை என்று நினைக்கிறேன். அதேபோன்று யாரும் அவரை ஆரம்பத்திலேயே புகழ்ந்து பேசக்கூடாது. ஏனெனில் அவர் தற்போது பதினைந்து வயதில் தான் இருக்கிறார். அவருக்கு இதெல்லாம் புரியுமா என்றால் கூட அது முழுவதுமாக அவருக்கு தெரியாது.

- Advertisement -

இதையும் படிங்க : கம்பீர் இந்த விடயத்தை தெளிவா சூர்யவன்ஷியிடம் சொல்லனும்.. அதுதான் கரெக்ட் – பார்த்திவ் படேல் கருத்து

சச்சின், விராட் கோலி போன்றவர்கள் எல்லாம் அனைத்து வடிவ போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளனர். எனவே என்னை பொறுத்தவரை வைபவ் சூர்யவன்ஷியும் அனைத்து வடிவ போட்டிகளிலும் விளையாடி தனது திறனை முழுவதுமாக நிரூபிக்க வேண்டும். அதற்காக அவர் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement