IND vs NZ : இறுதிவரை நான் போராடினேன். ஆனாலும் ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சி – மைக்கல் பிரேஸ்வெல் பேட்டி

Bracewell
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி நேற்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சுப்மன் கில்லின் அபாரமான இரட்டை சதம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. எனவே 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Shubman Gill 1

- Advertisement -

இந்த இமாலய இலக்கினை துரத்திய நியூசிலாந்து அணி சிறிய இடைவெளிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே ஒரு கட்டத்தில் 161 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஏழாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மிட்சல் சான்ட்னர் மற்றும் மைக்கல் பிரேஸ்வெல் ஆகியோர் 12 பந்துகளை சந்தித்து 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களது இந்த பாட்னர்ஷிப் காரணமாக நியூசிலாந்து அணி படிப்படியாக வெற்றியை நோக்கி முன்னேறியது.

ஒரு கட்டத்தில் சான்ட்னர் ஆட்டம் இழந்து வெளியேறினாலும் தொடர்ந்து விளையாடிய பிரேஸ்வெல் சதத்தை கடந்து வெற்றியை நோக்கி மிக பிரமாதமாக ஆடினார். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலை வந்த போது அவர் முதல் பந்தை சிக்சருக்கு விரட்டி நிச்சயம் கடைசி ஓவரில் அந்த ரன்களை அடிக்க முடியும் என்ற நம்பிக்கையை காட்டினார். கடைசியில் இறுதி ஓவரின் இரண்டாவது பந்தில் அவர் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து கடைசி விக்கட்டாக ஆட்டம் இழந்தார்.

Bracewell

இதன் காரணமாக நியூசிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பிரேஸ்வெல் 78 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 140 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பயத்தை காட்டிவிட்டார் என்று கூறலாம். கிட்டத்தட்ட அவரது அதிரடி ஒரு கட்டத்தில் அந்த அணிக்கு வெற்றியை பெற்று தந்து விட்டது என்று எதிர்பார்த்த நிலையில் கடைசியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் தன்னுடைய இந்த அதிரடியான ஆட்டம் குறித்து பேசியிருந்த பிரேஸ்வெல் கூறுகையில் : நாங்கள் நிச்சயம் இந்த போட்டியை இறுதிவரை கொண்டு செல்ல முடியும் என்று நினைத்தோம். அதன்படி நானும் சான்ட்னரும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கி முன்னேறினோம். அதேபோன்று கடைசி வரை பேட்டிங் செய்தால் இந்த இலக்கை துரத்த முடியும் என்று உறுதியாக நம்பினோம்.

இதையும் படிங்க : நான் டபுள் செஞ்சுரி பத்தி யோசிச்சதே அந்த ஒரு ஓவருக்கு அப்புறம் தான் – ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

இறுதியில் கடைசி கட்டத்தில் 20 ரன்கள் தேவை என்ற போது இன்றைய நாள் என்னுடைய நாளாக அமையாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இந்திய பவுலர்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசினார்கள். அதிலும் குறிப்பாக கடைசி கட்டத்தில் அவர்கள் பந்துவீசிய விதம் மிக அருமையாக இருந்தது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement