விராட் கோலியை பிசிசிஐ இப்படி பழிவாங்கியிருக்க கூடாது. அதிருப்தியை தெரிவித்து – சுனில் கவாஸ்கர் வருத்தம்

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற உள்ள நிலையில் 2வது போட்டி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.

INDvsSL

- Advertisement -

இந்த தொடருக்காக புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே மொஹாலிக்கு சென்று அங்கு வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நடைபெற்று முடிந்த டி20 தொடரை போல இந்த டெஸ்ட் தொடரிலும் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி 100வது டெஸ்ட்:
முன்னதாக நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வெடுத்த நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். குறிப்பாக முதல் போட்டி நடைபெறவுள்ள மொஹாலியில் அவர் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக விளையாடி வரும் விராட் கோலி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய பேட்டிங் துறையில் முதுகெலும்பாக கருதப்படுகிறார்.

Kohli

கடந்த 2014 முதல் கேப்டனாகவும் செயல்பட்டு வந்த அவர் பொறுப்பேற்றபோது 7வது இடத்தில் தவித்த இந்தியாவை தமது ஆக்ரோசம் நிறைந்த அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார். மேலும் பொறுப்பேற்றபோது சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறும் அணியாக இருந்த இந்தியாவை உலகின் எந்த ஒரு இடத்திலும் வெல்லும் அணியாக மாற்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சரித்திரம் வாய்ந்த வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். சொல்லப்போனால் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை கேப்டனாக பதிவு செய்துள்ள அவர் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

பழிவாங்கிய பிசிசிஐ:
இவ்வளவு சாதனைகளை செய்து தனது 100ஆவது போட்டியை மொஹாலியில் விளையாட இருக்கும் விராட் கோலியை கௌரவிக்க பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் சில முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு இவ்வளவு பங்காற்றியுள்ள அவர் விளையாடும் 100வது போட்டியானது ரசிகர்களின் அனுமதி இன்றி மூடப்பட்ட காலி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது பலரையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் கேப்டன்ஷிப் பதவியில் அவருக்கும் – பிசிசிஐக்கும் ஏற்பட்ட மோதல்தான் இதற்கு காரணம் என பல ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Gavaskar

இந்நிலையில் மொகாலி டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது. “எந்த போட்டியாக இருந்தாலும் அதில் ரசிகர்கள் இருப்பதையே பலரும் விரும்புவார்கள். சமீப காலங்களாக இந்திய அணி ரசிகர்கள் இல்லாமல் விளையாடி வருகிறது. இருப்பினும் சினிமா ஹீரோவாக இருந்தாலும் சரி கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சரி ரசிகர்கள் முன்னிலையில் செயல்படவே விரும்புவார்கள்.

- Advertisement -

அந்த நிலையில் 100வது டெஸ்ட் போட்டி என்பது ஒருவருக்கு மிகமிக ஸ்பெஷலானது. அப்படிப்பட்ட நிலையில் அங்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படாதது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் மொகாலியில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு நல்ல முடிவாகும்” என தெரிவித்துள்ளார்.

Ganguly

இருப்பினும் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த டி20 தொடர் மற்றும் லக்னோ, தரம்சாலா ஆகிய நகரங்களில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடர் ஆகிய போட்டிகளில் குறிப்பிட்டளவு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்த டெஸ்ட் தொடரின் 2வது போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானத்தில் கூட 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள்.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலைமையில் விராட் கோலி தனது 100வது போட்டியில் விளையாடும் மொகாலியில் மட்டும் ரசிகர்கள் அனுமதிக்கப் படாதது ஏன் என்று பல ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் நியாயமான கேள்வியை எழுப்புகிறார்கள்.

இதையும் படிங்க : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. முக்கிய வீரர் விலகல் – அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த மாதம் கேப்டன்ஷிப் தொடர்பாக பிசிசிஐ மற்றும் விராட் கோலிக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை இப்படி பிசிசிஐ பழிவாங்குகிறது என விராட் கோலியின் ரசிகர்கள் இது பற்றி வெளிப்படையாகவே பிசிசிஐ மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

Advertisement