குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. முக்கிய வீரர் விலகல் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Gujarat
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 26-ஆம் தேதி 15-வது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாத துவக்கத்தில் வீரர்களுக்கான மெகா ஏலமும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் போட்டி போட்டு தேர்வு செய்துள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தங்களது அணியில் உள்ள வீரர்களின் பட்டியலை உறுதி செய்துள்ள வேளையில் ஒரு சில வீரர்கள் இந்த தொடரில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

Gujarat Titans

- Advertisement -

அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா தலைமை வகிக்கும் குஜராத் அணியில் இருந்தும் தற்போது ஒரு முன்னணி அதிரடி ஆட்டக்காரர் வெளியேறியுள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர்களான ஜேசன் ராய் இம்முறை குஜராத் அணிக்காக விளையாட 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ள அவர் ஒரு மிகச் சிறந்த அதிரடி ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தனது அதிரடியை ஆரம்ப போட்டிகளில் இருந்து வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

Jason Roy

உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக்குகளில் முக்கிய வீரராக விளையாடி வரும் ஜேசன் ராய் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்த பி.எஸ்.எல் தொடரிலும் 6 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 303 ரன்கள் குவித்து அபாரமான பார்மில் இருந்தார். அதனை அப்படியே குஜராத் அணிக்காகவும் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கொரோனா பயோ பபுள் காரணமாக அந்த சூழலில் என்னால் இரண்டு மாதகாலம் இருக்க முடியாது என்பதனால் இந்த சீசனில் இருந்து வெளியேற விரும்புவதாக ஜேசன் ராய் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக குஜராத் அணி அவருக்கு பதிலாக மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய யோசித்து வருகிறது. வரும் மார்ச் 26 ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது மே மாதம் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : இவ்ளோ நாள் கழிச்சி கெடச்ச வாய்ப்பை இப்படியா வேஸ்ட் பண்ணுவீங்க – இளம் வீரரை கடிந்த வாசிம் ஜாபர்

போட்டிகள் அனைத்தும் மும்பை மாநிலத்தை சுற்றி மட்டுமே நடைபெற உள்ளதாலும், இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குஜராத் அணிக்காக நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட மூன்று வீரர்களாக கேப்டன் ஹர்டிக் பண்டியா மற்றும் சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் கான் மற்றும் துவக்க வீரர் சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement