விராட் கோலியிடம் இருக்கும் அந்த ஒரு பசி. கட்டாயம் கப் நமக்கு தான் கவலையே படாதீங்க – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

Gavaskar-and-Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி யின் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதில் விராட் கோலி முக்கிய பங்கு வைப்பார் என்று சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரராக விளையாடி வரும் விராட் கோலி பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை இந்திய அணியும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. தற்போதுள்ள இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியிலும் விராட் கோலி சீனியர் வீரராக முன்னின்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிசி கோப்பையை கைப்பற்றாமல் இருக்கும் இந்திய அணி இம்முறை 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்க்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் நேற்று வெளியிட்டிருந்த வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரை வெல்வதில் விராட் கோலி முக்கிய பங்கினை வகிப்பார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி இந்திய அணியில் இருப்பது அணியில் உள்ள வீரர்களுக்கு கூடுதலான உத்வேகத்தை தரும். ஏனெனில் விராட் கோலி ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றுள்ளார். எனவே மீண்டும் ஒருமுறை இரண்டாவது முறையாக உலககோப்பையை வெல்லும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற பசியுடன் காத்திருக்கிறார்.

இதையும் படிங்க : இந்த வீக்னெஸ் கொண்ட இந்தியாவை சூப்பர் 4இல் பாகிஸ்தான் அடிச்சு நொறுக்குவாங்க – டேனிஷ் கனேரியா எச்சரிக்கை

அதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் ரன் குவிக்கும் பசியோடு இருப்பதாலும் இந்த உலகக் கோப்பை வெல்ல அவர் இளம் வீரர்களுக்கு ஒரு மோட்டிவேட்டராக இருப்பார். அவரது செயல்பாடு நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்ல உதவும் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement