இந்த வீக்னெஸ் கொண்ட இந்தியாவை சூப்பர் 4இல் பாகிஸ்தான் அடிச்சு நொறுக்குவாங்க – டேனிஷ் கனேரியா எச்சரிக்கை

Danish Kaneria INDia
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முன்னதாக இத்தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா இந்தியாவுக்கு கொஞ்சம் கூட மாறாமல் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடிக்கு எதிராக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கை விட்டனர்.

அதனால் 66/4 என சரிந்த இந்தியாவை நல்லவேளையாக இசான் கிசான் 82 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 87 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றி 267 என்ற நல்ல வெற்றி இலக்கை நிர்ணயிக்க உதவினார்கள். அதைத் தொடர்ந்து மழை வந்ததால் ரத்து செய்யப்பட்ட அந்த போட்டியில் 1 புள்ளி மட்டுமே பெற்ற இந்தியா நேபாளுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

பலவீனமான இந்தியா:
அதனால் செப்டம்பர் 10ஆம் தேதி மீண்டும் பாகிஸ்தானுக்கு சூப்பர் 4 சுற்றில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் நேபாளை சுருட்டுவதற்கு 49 ஓவர்கள் எடுத்துக்கொண்டு 230 ரன்களை வழங்கிய இந்தியாவை பந்து வீச்சில் பலவீனமாக இருப்பதால் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அடித்து நொறுக்கு அதிக வாய்ப்புள்ளதாக டேனிஷ் கனேரியா எச்சரித்துள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் பவுலிங் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. குறிப்பாக அதிக அனுபவம் கொண்ட பேட்ஸ்மேன்கள் இல்லாத நேபாள் அனுபவமிக்க இந்திய பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்ட நேபாள் 200 ரன்களுக்கு மேல் எளிதாக அடித்தது. அந்த போட்டியில் இந்தியா அவர்களை 150 ரன்களுக்கு சுருட்டியிருக்க வேண்டும்”

- Advertisement -

“ஆனால் இந்தியாவுக்கு எதிராக நேபாள் அணியே 230 ரன்கள் அடிக்கிறது என்றால் பாகிஸ்தான் என்ன செய்யும் என்று கற்பனை செய்து பாருங்கள். எனவே இந்திய அணியின் தேர்வு குழுவினர் தங்களுடைய பவுலிங் மீது கவனம் செலுத்த வேண்டும். மேலும் ரோகித் சர்மாவும் குழப்பமாக இருந்தார். குறிப்பாக இந்த மைதானங்களில் 300 ரன்களை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா என்ற குழப்பம் ரோகித் சர்மாவிடம் தெரிந்தது. அதே போல அவர்களுடைய பேட்டிங்கிலும் பிரச்சனை இருக்கிறது”

இதையும் படிங்க: அந்த அவமானத்தை சந்திக்க பயந்துட்டீங்கா? ஜெய் ஷா – இந்தியாவை ஓப்பனாக கிண்டலடித்த நஜாம் சேதி, நடந்தது என்ன

“ஏனெனில் நேபாளுக்கு எதிராக இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனாலும் பாகிஸ்தானின் 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய தரமான பவுலர்களுக்கு எதிராக இந்தியாவின் டாப் ஆர்டர் திண்டாடியது. மேலும் தங்களுடைய அணியில் ரோகித் சர்மா நம்பிக்கை வைத்திருப்பதாலேயே உலக கோப்பையில் மாற்றம் செய்யவில்லை. இருப்பினும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் நாசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும். அனைவரும் இந்திய பேட்டிங் வலுவாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அது இன்னும் கிளிக்காகவில்லை” என்று கூறினார்.

Advertisement