டி20 மேட்சுக்கு இவரு செட்டே ஆகமாட்டாரு. ப்ளீஸ் அவரோட கரியரே காலி ஆயிடும் – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் சமநிலை வகித்த வேளையில் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி அசத்தியது.

IND vs SL

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் இந்த டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியில் சுப்மன் கில்லை தேர்வு செய்திருக்கக் கூடாது என்றும் தேர்வுக்குழுவினர் அவரை ஏன் தேர்வு செய்தார்கள் என்ற கருத்தினை வெளிப்படையாக முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் : சுப்மன் கில் ஒரு நல்ல டெஸ்ட் வீரர். அதேபோன்று ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக ஆடக்கூடியவர். அவருடைய பேட்டிங் ஸ்டைல் டி20-க்கு சுத்தமாக பொருந்தாது. அவரை டி20 போட்டிக்கான அணியில் தேர்வு செய்தது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

Shubman Gill

டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடக்கூடிய பிரிதிவி ஷா, நாராயணன் ஜெகதீசன் போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களை அணியில் எடுத்திருக்கலாம். ஆனால் அவர்களை விடுத்து சுப்மன் கில்லை அணியில் எடுத்துள்ளார்கள்.

- Advertisement -

இப்படி டி20 கிரிக்கெட்டில் அவரை விளையாட வைத்தால் அவருடைய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் கரியரும் காலி ஆகிவிடும். அவரை டி20 கிரிக்கெட்டில் பயன்படுத்தாமல் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தினால் நிச்சயம் அவர் பெரிய வீரராகவே இருப்பார் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs SL : எளிதாக சுருட்டி வீசி தொடரை கைப்பற்றிய இந்திய அணி – தொடரும் இலங்கை அணியின் சோகமான சாதனை

ஏற்கனவே இந்திய டி20 அணியில் வாய்ப்புக்காக பல வீரர்கள் காத்திருக்கும் வேளையில் ஹார்டிக் பாண்டியா தான் அவரை ஆதரித்து அணிக்குள் கொண்டு வந்தது மட்டுமின்றி தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருகிறார் என்று ஒரு கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement