IND vs SL : எளிதாக சுருட்டி வீசி தொடரை கைப்பற்றிய இந்திய அணி – தொடரும் இலங்கை அணியின் சோகமான சாதனை

IND vs SL
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் களமிறங்கிய இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றாலும் 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி ஜனவரி 7ஆம் தேதியன்று ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த இந்தியாவுக்கு இசான் கிசான் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் அடுத்த களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக 5 பவுண்டரி 2 சிக்சர்களை தெறிக்க விட்டார்.

குறிப்பாக மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில்லுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த அவர் அதிரடியாக 35 (16) ரன்கள் விளாசி அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே தமக்கே உரித்தான சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் இலங்கை பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் மைதானத்திலும் நாலாபுறமும் சுழன்றடித்து பவுண்டரிகளை தெறிக்க விட்டார்.

- Advertisement -

சிறப்பான வெற்றி:
அதிலும் குறிப்பாக கீப்பருக்கு பின்புறத்தில் விழுந்து விழுந்து 2 – 3 சிக்ஸர்களை பறக்க விட்டு தன்னை மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்த அவரது பேட்டிங்கை பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள். ரசிகர்களைப் போலவே மறுபுறம் நின்று கொண்டிருந்த சுப்மன் கில் அவரை வியந்து பார்த்து மெதுவாக பேட்டிங் செய்தாலும் 3வது விக்கெட்டுக்கு 11 ரன்கள் பார்ட்னர்ஷிப் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (36) ரன்கள் குவித்து அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கிய சூரியகுமார் வெறும் 40 பந்துகளில் சதத்தை கடந்து டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய 3வது சதத்தை விளாசி 7 பவுண்டரி 9 சிக்ஸருடன் 112* (51) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் கடைசி நேரத்தில் அப்சர் பட்டேல் தனது பங்கிற்கு 4 பவுண்டரியுடன் 21* (9) ரன்கள் எடுத்ததால் இந்தியா 20 ஓவர்களில் 228/5 ரன்கள் குவித்து மிரட்டியது.

- Advertisement -

இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 229 ரன்களை துரத்திய இலங்கைக்கு 44 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த குசால் மெண்டிஸ் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 23 (15) ரன்களிலும் நிஷாங்கா 15 (17) ரன்களிலும் அவுட்டானார்கள். அடுத்து வந்த பெர்னாண்டோ 1 (3) ரன்னில் நடையை கட்டிய நிலையில் டீ சில்வா 22 (14) அசலங்கா 19 (14) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து சஹாலின் சுழலில் சிக்கினார்கள்.

அதனால் 96/5 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணிக்கு வணிந்து ஹசரங்கா 9 (8) சமிக்கா கருணரத்னே 0 (2) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் வெற்றிக்கு போராடிய கேப்டன் சனாக்காவும் 2 சிக்ஸருடன் 23 (17) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 16.4 ஓவர்களிலேயே 137 ரன்களுக்கு இலங்கையை சுருட்டிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா, உம்ரான் மாலிக், சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று சொந்த மண்ணில் மீண்டும் தன்னை கில்லி என்பதையும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்தது. மேலும் 2024 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கி நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே சாதித்து காட்டியுள்ள இந்தியா தன்னை வலுவான அணி என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த வெற்றியால் 2023 புத்தாண்டை இந்தியா வெற்றியுடன் துவங்கி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்கஐபிஎல் ஏலத்துக்கு முன் இந்த டி20 சீரிஸ் நடந்திருந்தா அவர வாங்க காசு இருந்திருக்காது – இலங்கை வீரரை பாராட்டும் கம்பீர்

மறுபுறம் 2வது போட்டியில் வென்ற இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை சொதப்பலான செயல்பாடுகளால் கோட்டை விட்டது. ஏனெனில் இதுவரை இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் விளையாடிய 25 தொடர்களிலும் (இந்தியா 21 வெற்றி, 4 ட்ரா) அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. அதனால் இந்திய மண்ணில் ஒரு கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டுமென்ற அந்த அணியின் கனவுப் பயணம் சோகத்துடன் தொடர்கிறது.

Advertisement