ஐபிஎல் ஏலத்துக்கு முன் இந்த டி20 சீரிஸ் நடந்திருந்தா அவர வாங்க காசு இருந்திருக்காது – இலங்கை வீரரை பாராட்டும் கம்பீர்

Gambhir
Advertisement

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இலங்கை முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும் 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்று தொடரை சமன் செய்தது. அந்த வெற்றிக்கு 138/5 என தடுமாறிய போது களமிறங்கி டெத் ஓவர்களில் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி அதிரடியாக 56* (22) ரன்கள் குவித்து மிரட்டல் பினிஷிங் கொடுத்த இலங்கை கேப்டன் தசுன் சனாகா பந்து வீச்சிலும் ஒரு ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

சொல்லப்போனால் வெறும் 20 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த இலங்கை கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். அத்துடன் முதல் போட்டியிலும் 163 ரன்களை சேசிங் செய்யும் போது அதிரடியாக பேட்டிங் செய்த அவர் 45 (27) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய போதிலும் பினிஷிங் செய்ய முடியாததால் இலங்கை 2 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

கம்பீர் வியப்பு:
இருப்பினும் கேப்டனுக்கு அடையாளமாக மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையிலும் யாருமே எதிர்பாரா வகையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை தோற்கடித்து இலங்கைக்கு 5வது கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைத்தார். அந்த வகையில் உலக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படாத அண்டர் ரேட்டட் ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் ஜொலிக்கும் அவர் 2023 ஐபிஎல் தொடருக்காக கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் வெறும் 50 லட்சம் என்ற அடிப்படை விலையில் களமிறங்கினார்.

Asia Cup Dhasun Shanaka Sri Lanka

தற்போது கத்துக்குட்டியாக காட்சியளிக்கும் இலங்கையை சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ தெரியவில்லை எந்த அணியும் அவரை வாங்குவதற்கு முன் வரவில்லை. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய இந்த டி20 தொடர் மட்டும் 2023 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக நடைபெற்றிருந்தால் நிச்சயமாக சனாக்காவை வாங்குவதற்கு அனைத்து அணிகளும் போட்டி போட்டிருக்கும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். குறிப்பாக தாம் ஆலோசகராக இருக்கும் லக்னோ அணியில் அவரை வாங்குவதற்கு போதிய பணம் இல்லாமல் போயிருந்திருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இலங்கை கேப்டனின் திறமையை வியந்து பாராட்டி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவரை வாங்கும் அளவுக்கு என்னிடம் பணமில்லை. ஏனெனில் ஏலத்தில் அவர் அந்தளவுக்கு விலை போயிருப்பார். அது தான் ஏலத்தில் நடைபெற்றிருக்கும். குறிப்பாக இந்த தொடர் 2023 ஐபிஎல் ஏலத்துக்கு சற்று முன்பாக நடைபெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படி நடைபெற்றிருந்தால் சில அணிகளிடம் அவரை போட்டி போட்டு வாங்குவதற்கு தேவையான பணம் இருந்திருக்காது” என்று கூறினார்.

Gambhir

அவர் கூறுவது போல 2023 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் மற்றும் பைனலில் ஆட்டநாயகன் விருது வென்று இங்கிலாந்து 2வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய காரணத்தாலேயே சாம் கரண் 18.50 என்ற பிரம்மாண்ட தொகைக்கு விலை போய் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக சாதனை படைத்தார். அதே போலவே பென் ஸ்டோக்ஸ் போன்ற மேலும் சில வீரர்களும் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக கவனத்தை ஈர்த்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள்.

இதையும் படிங்கவீடியோ : ஒரு பச்சபுள்ளய போட்டு இப்படியா அடிப்பீங்க. இலங்கை அணியை கதறவைத்த இந்தியா – பிரமாண்ட இலக்கு

அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய தசுன் சனாக்கா விளையாடிய இந்த டி20 தொடர் ஏலத்துக்கு முன்பாக நடைபெற்றிருந்தால் நிச்சயமாக அவர் பெரிய தொகைக்கு விலை போயிருப்பார் என்று உறுதியாக சொல்லலாம். இருப்பினும் ஐபிஎல் தொடரில் ஏலம் போன நிறைய வீரர்கள் நாட்டுக்காக சுமாராக செயல்படும் நிலையில் தங்களது கேப்டன் விலை போகாததற்காக இலங்கை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைபவர்களாகவே உள்ளனர்.

Advertisement