ஒரு பச்சபுள்ளய போட்டு இப்படியா அடிப்பீங்க. இலங்கை அணியை கதறவைத்த இந்தியா – பிரமாண்ட இலக்கு

SUryakumar Yadav 112
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றாலும் 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் 1 – 1* என்ற கணக்கில் சமனடைந்ததுள்ள இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜனவரி 7ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 2024 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு இசான் கிசான் ஆரம்பத்திலேயே 1 (2) ரன்னில் அவுட்டானாலும் அடுத்து வந்த ராகுல் திரிபாதி மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் உடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 2 சிக்சரை தெறிக்க விட்டு 35 (16) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய நம்பிக்கை நாயகன் சூர்யகுமார் யாதவ் தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே தமக்கே உரித்தான அதிரடி பாணியில் வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

சரவெடி சூர்யா:
குறிப்பாக இலங்கையின் ஸ்பின்னர் முதல் வேகப்பந்து வீச்சாளர்கள் வரை அனைத்து பவுலர்களும் எப்படி பந்து வீசினாலும் அதை மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடித்த சூரியகுமார் விக்கெட் கீப்பர்கள் நிற்கும் பின் திசையில் விழுந்து விழுந்து சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதை மறுபுறம் வேடிக்கை பார்க்கும் வகையில் மெதுவாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 3வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தி 2 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (36) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது வந்த ஹர்திக் பாண்டியா 4 (2) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த தீபக் ஹூடாவும் 4 (4) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்த மைதானத்தில் இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கி ருத்ரதாண்டவம் ஆடிய சூரிய குமார் யாதவ் வெறும் 45 பந்துகளில் சதமடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த 2வது இந்திய வீரர் என்ற அற்புதமான சாதனை படைத்து இந்தியாவை 200 ரன்கள் கடக்க வைத்தார்.

- Advertisement -

தன்ன்னுடைய 3வது டி20 சதத்தை விளாசிய அதே வேகத்தில் கடைசி வரை அவுட்டாகாமல் அடம் பிடித்து இலங்கை பவுலர்களை பிரித்து மேய்ந்த சூரியகுமார் 7 பவுண்டரி 9 மெகா சிக்சர்களுடன் 112* (51) ரன்கள் விளாசினார். அவருடன் கடைசி நேரத்தில் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய அக்சர் பட்டேல் 4 சிக்சருடன் 21* (9) ரன்கள் குவித்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெளுத்து வாங்கிய இந்தியா 228/5 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்கவீடியோ : கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? இது எப்டி அவுட்டாகும் – பிக்பேஷ் தொடரில் மற்றுமொரு சர்ச்சையால் ரசிகர்கள் கோபம்

இப்போட்டியில் ஆரம்பத்தில் இந்தியா தடுமாறினாலும் ராகுல் திரிபாதி துவங்கி வைத்த அதிரடியை கச்சிதமாக பயன்படுத்திய சூரியகுமார் இந்த போட்டியில் இந்தியா பிரமாண்ட இலக்கை நிர்ணயிக்க உதவினார். குறிப்பாக அவரது அதிரடியால் இந்தியா கடைசி 10 ஓவரில் மட்டும் 136 ரன்கள் குவித்தது. இருப்பினும் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானத்தில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் இலங்கையும் வெற்றி பெற போராட உள்ளது.

Advertisement