அவ்ளோ போராடிய ரோஹித் சர்மா இதை செஞ்சுருந்தா இந்தியா ஜெயிச்சுருக்கும் – சுனில் கவாஸ்கர் கருத்து

- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் அவமான தோல்வியை சந்தித்ததால் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 2வது போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 271/7 ரன்களை குவித்து மிரட்டியது. ஆனால் ஒரு கட்டத்தில் 69/6 என சரிந்த அந்த அணிக்கு முகமதுல்லா 77 ரன்களும் மெஹநதி ஹசன் சதமடித்து 100 ரன்களும் விளாசி வெற்றியை பறிக்கும் அளவுக்கு கடைசி நேரத்தில் இந்திய பவுலர்கள் மோசமாக செயல்பட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

Bangladesh

- Advertisement -

அதை விட 272 ரன்களை சேசிங் செய்யும் போது காயமடைந்த ரோகித் சர்மா களமிறங்காத நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய விராட் கோலி, ராகுல், ஷிகர் தவான் உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்கள் சொதப்பியதால் 65/4 என திணறிய இந்தியாவை முடிந்த அளவுக்கு போராடிய ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் அக்சர் பட்டேல் 56 ரன்களும் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள். அதனால் வேறு வழியின்றி காயத்துடன் கட்டுப்போட்டுக் கொண்டு வலியுடன் களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடி காட்டினாலும் தீபக் சஹர் போன்ற டெயில் எண்டர்கள் அவருக்கு கை கொடுக்காமல் அவுட்டாகி சென்றார்கள்.

தப்பு பண்ணிட்டாரு:
அதிலும் குறிப்பாக 48வது ஓவரை முழுமையாக எதிர்கொண்ட முகமது சிராஜ் ஸ்டிரைக் கூட மாற்றாமல் அடுத்த ஓவரில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். ஆனாலும் மறுபுறம் ரோகித் சர்மா அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தஃபீசுர் ரஹ்மான் வீசிய அந்த ஓவரில் 0, 4, 4, 0, 6, 0 என 15 ரன்கள் குவித்த ரோகித் சர்மா கடைசி பந்தில் சிக்சர் அடிக்க தவறியதால் இந்தியா பரிதாபமாக தோற்க 2 – 0* (3) என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

IND vs BAn Mushfiqar Rahim Shreyas Iyer

இப்போட்டியில் இந்தியாவுக்காக போராடிய ரோகித் சர்மா பாராட்டுகளை பெற்றார். இருப்பினும் வலியுடன் 9வது களமிறங்கி அட்டகாசமாக விளையாடிய அவர் இன்னும் கொஞ்சம் முன்பாக அல்லது ஒரு சில இடங்கள் முன்பாக களமிறங்கியிருந்தால் எளிதாக வெற்றி பெற வைத்திருக்கலாமே என்று ரசிகர்கள் ஆதங்கத்தை தெரிவிக்கிறார்கள். ஏனெனில் சிறப்பாக விளையாடிய அவருக்கு கடைசியில் பந்து மட்டுமே குறைவாக இருந்ததுடன் இந்தியாவும் கடைசிப் பந்தில் தான் தோற்றது.

- Advertisement -

இந்நிலையில் இவ்வளவு போராடிய ரோகித் சர்மா 7வது இடத்தில் களமிறங்கியிருந்தால் எளிதாக இந்தியா வென்றிருக்கும் அவரது போராட்டமும் வீணாகியிருக்காது என்று முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு : “இப்போட்டியில் பின்னோக்கி சென்று பார்க்கும் போது அவர் ஏன் முன்னதாக பேட்டிங் செய்ய வரவில்லை என்று எண்ணம் வருகிறது. குறிப்பாக 9வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த அவர் 7வது இடத்தில் களமிறங்கியிருக்க வேண்டும்.

Rohit-Sharma

அப்படி நடந்திருந்தால் அக்சர் பட்டேல் இன்னும் சற்று வித்தியாசமாக பேட்டிங் செய்திருப்பார். ஏனெனில் ஷார்துல் தாகூர், தீபக் சஹர் ஆகியோர் வந்ததை பார்த்த அக்சர் படேல் ஒருவேளை இறுதி வரை ரோகித் சர்மா வர மாட்டார் என்று நினைத்து நாம் அதிரடியாக விளையாடி அவுட்டாகி விடக்கூடாது என்ற எண்ணத்துடன் பொறுமையாக விளையாடினார்”.

இதையும் படிங்க : கதை முடிஞ்சது. காலம் கடந்த தோனியின் மாஸ் மும்மூர்த்திகள் ஜோடி? அதிர்ச்சி புள்ளிவிவரத்தால் ரசிகர்கள் சோகம்

“அதனால் ஒருவேளை ரோகித் சர்மா முன்கூட்டியே வந்திருந்தால் நாம் அவுட்டானால் கூட அவர் இருக்கிறார் என்ற தைரியத்துடன் அக்சர் படேல் சற்று விவேகமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு போட்டியின் முடிவையே மாற்றியிருப்பார். அத்துடன் வெற்றி பறிபோன நிலைமையில் தான் ரோகித் சர்மா 9வது இடத்தில் களமிறங்கினார். ஒருவேளை அவர் 7வது இடத்தில் களமிறங்கியிருந்தால் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்.

Advertisement