கதை முடிஞ்சது. காலம் கடந்த தோனியின் மாஸ் மும்மூர்த்திகள் ஜோடி? அதிர்ச்சி புள்ளிவிவரத்தால் ரசிகர்கள் சோகம்

ODI
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஏமாற்ற தோல்வியை சந்தித்ததால் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 2வது போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஒரு கட்டத்தில் 69/6 என சரிந்தாலும் முகமதுல்லா 77 ரன்களும் மெஹதி ஹசன் 100* ரன்களும் குவித்ததால் 50 ஓவர்களில் 271/7 ரன்கள் எடுத்து மிரட்டும் அளவுக்கு கடைசி நேரங்களில் இந்தியாவின் பந்து வீச்சு படுமோசமாக அமைந்தது.

Kohli

- Advertisement -

அதை தொடர்ந்து 272 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா காயமடைந்த நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய விராட் கோலி, ராகுல், சிகர் தவான் உள்ளிட்ட முதுகெலும்பு வீரர்கள் சொதப்பினர். இருப்பினும் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் அக்சர் பட்டேல் 56 ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அதனால் வேறு வழின்றி கடைசி நேரத்தில் வலியுடன் களமிறங்கி வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா 51* (28) ரன்கள் குவித்த போதிலும் தீபக் சஹர், தாகூர், சிராஜ் போன்ற டெயில் எண்டர்கள் கொஞ்சம் கூட கை கொடுக்காததால் இந்தியா பரிதாபமாக தோற்றது.

காலம் கடந்த மும்மூர்த்திகள்:
அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது 15 ரன்களை விளாசி பயத்தை காட்டிய ரோகித் சர்மா கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க தவறியதால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று வங்கதேசம் சாதனை படைத்துள்ளது. முன்னதாக இந்த தோல்விக்கு பவுலிங் மோசமாக இருந்தது என்பதுடன் டாப் ஆர்டரில் இருக்கும் சீனியர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்படாதது முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக விராட் கோலி, ஷிகர் தவான் என்ற 2 மகத்தான அனுபவம் வாய்ந்த வீரர்கள் முறையே 5, 8 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் 51* ரன்கள் விளாசிய ரோகித் சர்மாவும் இப்போட்டியை தவிர்த்து சமீப காலங்களாகவே பெரும்பாலான போட்டிகளில் பழைய பன்னீர்செல்வமாக ரன்கள் குவிக்க முடியாமல் திண்டாடுவதை அனைவரும் அறிவோம்.

Rohit and Dhawan

முன்னாள் கேப்டன் தோனியின் ஆதரவுடன் சச்சினுக்கு பின் ரன் மெஷினாக உருவெடுத்த விராட் கோலி 2011க்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது இடத்தில் நிரந்தரமாக களமிறங்கும் பேட்ஸ்மேனாக அவதரித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதே போல் 2013இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மா – ஷிகர் தவான் ஆகிய புதிய இரட்டைக்குழல் துப்பாக்கி போன்ற ஓப்பனிங் ஜோடியை தோனி அறிமுகப்படுத்தினார். அதை பயன்படுத்தியா அந்த ஜோடி 2013 சாம்பியன்ஸ் டிராபி உட்பட நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நிரந்தர ஓப்பனிங் ஜோடியாக உருவெடுத்தது.

- Advertisement -

அதன்பின் 2014, 2015, 2016, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை உட்பட 2019 வரை ஒருநாள் கிரிக்கெட்டை ஆட்சி செய்யும் அளவுக்கு பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய அந்த மூவரும் நிறைய சரித்திர வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டின் டாப் 3 மும்மூர்த்திகளாக அவதரித்தனர். ஆனால் உலகில் எதுவுமே நிலையில்லை அனைத்தும் ஒருநாள் முடிவுக்கு வரும் என்ற விதிப்படி 2019 உலகக்கோப்பையில் காயத்துடன் சதமடித்து வெளியேறிய பின் குணமடைந்து திரும்பிய ஷிகர் தவான் பழைய பன்னீர்செல்வமாக செயல்பட முடியாமல் திண்டாடுகிறார்.

Dhawan

2019க்குப்பின் பார்மை இழந்து 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் திண்டாடிய விராட் கோலி சமீபத்திய ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பினாலும் பழைய கிங் கோலியாக 3 வகையான கிரிக்கெட்டிலும் செயல்பட முடியாமல் தவிக்கிறார். அதே போல் 2019 உலகக்கோப்பையில் 5 சதங்களை அடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா அதன் பின் பழைய ஹிட்மேனாக அதிரடி காட்ட முடியாமல் பெரும்பாலான போட்டிகளில் மண்ணை கவ்வுகிறார்.

இதையும் படிங்க : காயத்துடன் தைரியமாக இறுதிவரை போராடிய ரோஹித் சர்மா – 2 புதிய வரலாற்று சாதனைகள் படைத்து அசத்தல்

மொத்தத்தில் சராசரியாக 33 வயதை கடந்து விட்ட இந்த மும்மூர்த்தி ஜோடிகள் காலம் கடந்ததைப் போல் சமீப காலங்களில் சொதப்பலாக செயல்படுவது இந்தியாவுக்கு பின்னடைவை கொடுக்கிறது. அதற்கு சான்றாக 2017 – 2019 ஆகிய காலகட்டத்தில் 43 சதங்களை (தவான் 8, ரோஹித் 18, விராட் 17) தெறிக்க விட்டு ஒருநாள் போட்டிகளில் பட்டையை கிளப்பி இந்த மூவர் ஜோடி 2020 – 2022* வரை வெறும் 1 சதம் (ரோஹித் 1) மட்டுமே அடித்துள்ளது என்ற புள்ளி விவரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. இதனால் காலம் கடந்த இவர்கள் அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டிய நேரம் வந்து விட்டதாக ரசிகர்கள் சோகத்துடன் தெரிவிக்கிறார்கள்.

Advertisement