- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தவொரு விடயம் போதாதா? அடுத்த வேர்ல்டுகப்புக்கு அவங்க 2 பேருமே ரெடி – சுனில் கவாஸ்கர் கருத்து

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அவர்கள் இருவரது சிறப்பான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதோடு 2027 உலககோப்பை தொடரில் அவர்கள் விளையாடுவார்களா? என்ற விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது.

2027 உலககோப்பை தொடருக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி ரெடி : சுனில் கவாஸ்கர்

ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர்கள் இருவரும் 2027 ஒருநாள் உலககோப்பை தொடர் வரை விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அடுத்த உலககோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதாலும், அதற்குள் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 40 வயதை எட்டி விடுவார்கள் என்பதால் அவர்கள் உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனால் அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த 2027 உலககோப்பையில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று முன்னணி வீரர்கள் பலரும் அவர்களுக்கு ஆதரவளித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை ஆதரித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அவர்கள் விளையாட சம்மதித்ததுமே அடுத்த உலககோப்பை தொடரில் அவர்கள் விளையாட தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டது. அனுபவ வீரர்களான அவர்கள் இருவரும் அடுத்த உலககோப்பை தொடரில் விளையாட விரும்புகிறார்கள்.

- Advertisement -

இனிவரும் 2 ஆண்டுகளில் அவர்கள் இருவரும் ரன்களை குவிக்கிறார்களோ? இல்லையோ? அதை யாரும் கணக்கில் கொள்ளாமல் அடுத்த உலககோப்பை தொடரில் இருவரும் விளையாட சம்மதித்தால் அவர்களுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் இருவரது அனுபவமும், பங்களிப்பும் நிச்சயம் இந்திய அணிக்கு அடுத்த உலககோப்பை தொடரின் போது தேவைப்படும் என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என்னோட 20 வருஷ கரியர்ல இப்படி நடப்பது இதுதான் முதல் முறை.. ஆஸ்திரேலிய தொடர் குறித்து – ரோஹித் சர்மா பேச்சு

மேலும் தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடிய விதத்தை பார்க்கையில் “2027 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர்களது பெயரை தற்போதே எழுதிவிடலாம்” என்றும் தோன்றுவதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -