என்னோட 20 வருஷ கரியர்ல இப்படி நடப்பது இதுதான் முதல் முறை.. ஆஸ்திரேலிய தொடர் குறித்து – ரோஹித் சர்மா பேச்சு

Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்திருந்த முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் எவ்வாறு செயல்படப்போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்திருந்தது. இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்ததால் அவரது பேட்டிங் மீது சில விமர்சனங்கள் முதல் போட்டிக்கு பின்னர் ஏற்பட்டன.

20 வருஷத்துல இப்படியொரு இடைவெளி கிடைத்ததில்லை : ரோஹித் சர்மா

அதன்பிறகு அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவதாக அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது 73 ரன்கள் அடித்து தனது மிகச் சிறப்பான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தி இருந்தார். பின்னர் சிட்னி நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் ஆட்டமிழக்காமல் சதமடித்து இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இப்படி நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் ஒரு அரைசதம், ஒரு சதம் என மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும், தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடருக்காக தான் எவ்வாறு தயாராகினேன்? என்பது குறித்தும், இந்த தொடரில் விளையாடியது எப்படி இருந்தது? என்பது குறித்தும் ரோகித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். என் வாழ்நாளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆஸ்திரேலிய தொடருக்காக தயாரானதாக நினைக்கிறேன். ஏனெனில் இந்த ஆஸ்திரேலியா தொடருக்காக நான் தயாராக நான்கு, ஐந்து மாதங்கள் இடைவெளி இருந்தது. இப்படி மிகப்பெரிய இடைவெளி என்னுடைய கரியரில் கிடைத்ததே இல்லை. அதனால் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆஸ்திரேலியா தொடரில் அசத்த வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அதன்படியே இந்த தொடரை மிகச் சிறப்பாக முடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதேபோன்று எதிர்வரும் நாட்களை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல நினைக்கிறேன். ஆஸ்திரேலியா மைதானங்களில் நான் பலமுறை விளையாடியிருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக வந்து விளையாடும்போது அந்த கள சூழலுக்கு ஏற்ப சில மாறுபாடுகளை செய்தாக வேண்டும்.

இதையும் படிங்க : வயசு முக்கியம் இல்ல.. திறமைக்கும் நீங்க மதிப்பு குடுங்க.. தேர்வாளர்களை சாடிய – அஜின்க்யா ரஹானே

அதனை கருத்தில் கொண்டே பயிற்சிகளை மேற்கொண்டு இந்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்டதாக ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆஸ்திரேலியா தொடரில் தனக்கு ரசிகர்கள் மிகச் சிறப்பாக ஆதரவளித்ததாகவும், இந்திய மக்கள் எப்போதும் இந்திய அணியை எந்த நாட்டிலும் விட்டுக் கொடுத்தது கிடையாது என்றும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி கூறியிருந்தார்.

Advertisement