வயசு முக்கியம் இல்ல.. திறமைக்கும் நீங்க மதிப்பு குடுங்க.. தேர்வாளர்களை சாடிய – அஜின்க்யா ரஹானே

Rahane
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 90 ஒருநாள் போட்டிகள், 20 டி20 போட்டிகள் மற்றும் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை பொறுத்த வரை ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரகானே கழட்டிவிடப்பட்டாலும் தொடர்ச்சியாக டெஸ்ட் அணியில் அனுபவ வீரராக தொடர்ந்து விளையாடி வந்தார்.

வயசை பாக்காம திறமைக்கு முக்கியத்துவம் குடுங்க : அஜின்க்யா ரஹானே

ஆனால் கடந்த 2023-ஆம் ஆண்டிற்கு பிறகு அவருக்கு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. தற்போது 37 வயதாகும் அஜின்க்யா ரஹானே இனியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு பெறுவது கடினம் என்றே தெரிகிறது. ஏனெனில் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதனால் அஜின்க்யா ரஹானே டெஸ்ட் கரியர் முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம். ஆனாலும் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வேண்டும் என்பதற்காக ரகானே தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரஞ்சி டிராபி தொடரிலும் மும்பை அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியை பொறுத்தவரை வயதிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அனுபவத்திற்கும் திறமைக்கும் வாய்ப்பளியுங்கள் என்றும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தன்னுடைய தேவை இருந்ததாகவும் உணர்ந்ததாக ரகானே தேர்வாளர்களை சாடி சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : வயது என்பது எப்போதும் ஒரு நம்பர் தான். எந்த வீரராக இருந்தாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்களது திறமையை கருத்தில் கொண்டு வாய்ப்பளிக்க வேண்டும். தேர்வு என்பது வயதை பற்றியது அல்ல, நோக்கத்தை பற்றியது. ஆஸ்திரேலிய தொடரை பொறுத்தவரை நான் இந்திய அணிக்கு தேவை என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : ஐசிசி மகளிர் உ.கோ: மீண்டும் குறுக்கே வரும் அசுரன் ஆஸி.. இந்தியாவின் ஃபைனல் கனவு உடைக்கிறதா?

அது என்னுடைய தனிப்பட்ட உணர்வு. ஆனால் அவர்கள் என்னை தேர்வு செய்யவில்லை. ரெட் பால் கிரிக்கெட்டில் அனுபவம் தான் விடயம். ஆஸ்திரேலியா அணியை பார்த்தீர்கள் என்றால் மைக்கில் ஹஸி 30 வயதிற்கு பிறகு தான் அறிமுகமாகி ரன்களை குவித்தார் என தேர்வாளர்களை விளாசி அஜின்க்யா ரஹானே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement