தோனியை விட அவர் தான் எப்போதும் இந்தியாவின் ஒரிஜினல் மிஸ்டர் கூல் கேப்டன் – ஜாம்பவானை பாராட்டிய கவாஸ்கர்

Gavaskar-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் இன்று கிரிக்கெட் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு அதிகளவு கொண்டாடப்படும் நம்பர் ஒன் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதற்கு 1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான அணி வென்றதே ஆழமான விதை போட்டது என்றால் மிகையாகாது. அந்தத் தொடரில் கத்துக்குட்டியாக களமிறங்கிய இந்திய அணி வீரர்களை நம்மாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொடுத்து வழி நடத்திய கபில் தேவ் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் தனி ஒருவனாக 175* ரன்கள் அடித்து பெற்றுக்கொடுத்த வெற்றியை யாராலும் மறக்க முடியாது.

Kapil

- Advertisement -

அந்த உத்வேகத்தில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய வலுவான அணிகளிடம் தலா ஒரு முறை தோற்றாலும் மற்றொரு போட்டியில் வென்ற இந்தியா தேவையான வெற்றிகளுடன் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து ஃபைனலுக்கு சென்றது. அதைத்தொடர்ந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று உலகையே மிரட்டி கொண்டிருந்த கிளைவ் லாய்ட் தலைமையிலான வெறித்தனமான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மிஸ்டர் கூல் கேப்டன்:
அந்த குறைந்த ரன்களை எளிதாக அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக 33 (28) ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை கபில் தேவ் நீண்ட தூரம் ஓடிச் சென்று பிடித்தது தான் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதை பயன்படுத்திய இந்தியா மிகச் சிறப்பாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸை வெறும் 140 ரன்களுடன் சுருட்டி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது மொத்த இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

kapildev

மேலும் சச்சின் போன்ற நிறைய இளம் வீரர்கள் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று உத்வேகத்தை கொடுத்த அந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த கபில் தேவ் இன்றும் மிகவும் இளம் வயதில் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அந்த வகையில் அனுபவம் மற்றும் மிகவும் இளம் வயதில் வெஸ்ட் இண்டீஸ் போன்ற தரமான அணியை தோற்கடித்து ஆல் ரவுண்டராக செயல்பட்டு உலக கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் தான் இந்தியாவின் ஒரிஜினல் மிஸ்டர் கூல் கேப்டன் என்று அவரது தலைமையில் விளையாடிய சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 3 விதமான உலக கோப்பையை எம்எஸ் தோனி வென்றிருந்தாலும் அதற்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த கபில் தேவ் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளில் கபில் அபாரமாக செயல்பட்டார் என்று சொல்லியே தீர வேண்டும். குறிப்பாக ஃபைனலில் அவர் பிடித்த விவ் ரிச்சர்ட்ஸ் கேட்ச் யாராலும் மறக்க முடியாது. அவர் எந்த வகையான சூழலிலும் அசத்தும் அளவுக்கு கேப்டன்ஷிப் செய்யும் பன்முகத்தன்மை கொண்டவர்”

Kapil and Dhoni

“மேலும் ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகையை நிலைத்திருக்கும். அதுவே அவருடைய ஒரிஜினல் மிஸ்டர் கூல் கேப்டனாக காட்டுகிறது. அந்த வகையில் அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

- Advertisement -

இருப்பினும் அந்த சமயத்தில் இருந்த மகிழ்ச்சி ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அனைத்து இந்திய வீரர்களின் முகத்திலும் புன்னகை இருந்த அந்த தருணத்தை இப்போது திரும்பிப் பார்த்தாலும் நெஞ்சை தொடுவதாக அமையும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் இருந்து இன்னும் அவரை நாங்க தூக்கல. அவர் காயத்தால் இடம்பெறாமல் போயிட்டாரு – பி.சி.சி.ஐ விளக்கம்

அந்த வகையில் மகத்தான கேப்டனாக ஜொலித்த கபில் தேவ் போல் மகத்தான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இது நாள் வரை இந்தியாவுக்கு கிடைக்கவில்லை என்பது அவருடைய தரத்திற்கு மற்றொரு சான்றாகும்.

Advertisement