இதுல நாம அவமானப்பட ஒன்னுமில்ல.. காரணம் அது தான்.. இந்திய அணி தோல்வி பற்றி கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar
Advertisement

கோலாகலமாக நடைபெற்ற முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களை மீண்டும் உலக சாம்பியனாக பிரகடனப்படுத்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடி 241 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரோகித் சர்மா 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 137, லபுஸ்ஷேன் 58* ரன்கள் எடுத்து 58 ஓவரிலேயே மிகவும் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மீண்டும் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:
இத்தனைக்கும் லீக் சுற்றிலேயே ஆஸ்திரேலியாவை தோற்கடித்து நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, செமி ஃபைனலில் நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர்.

ஆனாலும் வழக்கம் போல முக்கியமான ஃபைனலில் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்காமல் சொதப்பிய இந்தியா பந்து வீச்சிலும் மிடில் ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் 2013க்குப்பின் 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்வியை சொந்த மண்ணில் நிறுத்தும் வாய்ப்பை தவறவிட்ட இந்தியாவை நாக் அவுட்டின் சோக்கர் என்று பாகிஸ்தான் போன்ற எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற தரமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஃபைனலில் போராடி தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை என்று சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் சோகமாக இருக்கலாம். ஆனால் இந்த வலுவான இந்திய அணிக்காக நான் பெருமைப்படுகிறேன். சில நேரங்களில் சில அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக செல்லாது”

இதையும் படிங்க: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததும் – டிரென்டாகும் ஷிகார் தவானின் பெயர்

“ஆனால் அவர்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினார்கள். எனவே இந்த அணியால் நான் சூப்பராக பெருமைப்படுகிறேன். மேலும் இன்று சிறப்பாக விளையாடி சிறந்த அணியாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை” என்று கூறினார். அந்த வகையில் கேப்டன் ரோகித் சர்மா தம்முடைய கடைசி வாய்ப்பிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement