உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததும் – டிரென்டாகும் ஷிகார் தவானின் பெயர்

Gill-and-Dhawan
- Advertisement -

இந்திய அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் இந்த உலகக்கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அட்டகாசமான ஃபார்மில் இருந்த வேளையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களை தவறவிட்டார். அதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலிருந்து தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வந்த சுப்மன் கில் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை.

ஏனெனில் இந்த 2023-ஆம் ஆண்டு முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதங்களை விளாசி வந்த சுப்மன் கில் இந்த உலக கோப்பை தொடரிலும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் நேற்று நடைபெற்ற முக்கியமான இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க அவரும் ஒரு காரணம் என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஏனெனில் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 7 பந்துகளை சந்தித்து வெறும் 4 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவர் மட்டும் சற்று சுதாரித்து 15 ஓவர்கள் வரை விளையாடி இருந்தால் நிச்சயம் இந்திய அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்று இருக்கும்.

ஆனால் அவசரப்பட்டு சுப்மன் கில் ஆட்டமிழந்த வேளையில் இந்திய அணி அங்கேயே சிக்கலில் சிக்கிக் கொண்டது என்று ரசிகர்கள் அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளனர். மேலும் இந்த இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு ரசிகர்கள் ஷிகார் தவானின் பெயரையும் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய ஒரு தொடரில் அதுவும் இறுதிப்போட்டி போன்ற ஒரு அழுத்தமான போட்டியில் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு விளையாட வேண்டிய அவசியம். இப்படி ஒரு அழுத்தமான போட்டியில் இளம் வீரரான சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளிப்பதாகவும், அதே இடத்தில் அனுபவ வீரரான ஷிகார் தவான் இருந்திருந்தால் நிச்சயம் அவர் ரோகித்துடன் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்திருப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : தோல்வியை சந்தித்தாலும்.. ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பேசிய – பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

மேலும் இங்கிலாந்தில் கடந்த முறை நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலககோப்பை போட்டியில் அதிரடியான சதம் விளாசியதையும் சுட்டி காட்டிய ரசிகர்கள் தவான் போன்ற ஒரு மிகச் சிறப்பான துவக்க வீரர் இருக்கும்போது அவரை நிச்சயம் அணியில் வைத்திருந்து கட்டாயம் இது போன்ற தொடர்களில் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement