தோல்வியை சந்தித்தாலும்.. ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பேசிய – பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

Dravid-and-Rohit
- Advertisement -

அகமதாபாத் நகரில் நடைபெற்ற முடிந்த ஐசிசியின் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இருந்தாலும் இந்த தொடரின் இறுதிப்போட்டியை தவிர்த்து இந்திய அணி விளையாடிய பத்து ஆட்டங்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது. குறிப்பாக ரோகித் சர்மா இந்த தொடரில் 597 ரன்கள் குவித்து கோலிக்கு அடுத்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்து வீரராக தனது பெயரை பதிவு செய்தார். அதோடு இறுதி போட்டியிலும் 31 பந்துகளை சந்தித்த அவர் 47 ரன்கள் சேர்த்து அதிரடியான துவக்கத்தை அளித்தார்.

- Advertisement -

இருப்பினும் இந்திய அணியின் பேட்டிங் சரிவு மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் ஆகியவை காரணமாக இந்த போட்டியை இந்திய அணி இழந்தது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டி முடிந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் :

ரோகித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா உண்மையிலேயே ஒரு மிகச் சிறப்பான கேப்டன். அவர் இந்த உலகக்கோப்பை தொடருக்காக கடினமாக உழைத்தார். அதோடு இந்திய அணியின் ஓய்வறையையும் மிக அழகாக பார்த்துக் கொண்டார். ஒவ்வொரு வீரருமே அவரிடம் பேசும் வகையில் நிறைய நேரத்தை வழங்கினார்.

- Advertisement -

அதோடு வீரர்களுடன் ஒன்றாக இணைந்து அதிக நேரம் செலவிட்டு அணியை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். அதேபோன்று அவரது பேட்டிங்கிலும் வெளிப்பட்ட அதிரடி இந்திய அணியை ஒரு நிலையான வெற்றிக்கு கொண்டு வந்தது. அவர் மற்ற வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த தொடரில் மிகச் சிறப்பாக அணியை வழி நடத்தினார். இறுதியில் நாங்கள் சந்தித்த இந்த தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலகக்கோப்பை 2023 : டாசின் போதே உறுதியான இந்திய அணியின் தோல்வி – இதை கவனிச்சீங்களா?

ஏற்கனவே 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் கோப்பையை தவறவிட்ட இந்திய அணியானது நிச்சயம் சொந்த மண்ணில் இம்முறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் 10 ஆட்டங்களிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது இன்னமும் ரசிகர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement