உலகக்கோப்பை 2023 : டாசின் போதே உறுதியான இந்திய அணியின் தோல்வி – இதை கவனிச்சீங்களா?

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு டாசில் தோல்வியை சந்தித்ததும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அகமதாபாத் மைதானத்தில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

அதோடு இந்திய அணியும் இந்த தொடரில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதோடு முதலாவதாக இந்திய அணி பந்துவீசுகையில் எதிரணிகள் 300 ரன்களை கடந்ததே கிடையாது.

அந்த வகையில் நேற்றைய போட்டியிலும் இந்திய அணியின் டாஸ் வென்று முதலில் பந்துவீசி இருந்தால் நிச்சயம் போட்டி இந்திய அணிக்கு சாதகமாக முடிந்திருக்கும். அதேவேளையில் டாசில் தோல்வியை சந்தித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் சுப்மன் கில் ஆட்டம் இழந்ததும் ரோஹித் உடனடியாக ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஓவர்களில் நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரும் நான்கு ரன்களில் நடையை கட்டினார். இப்படி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி மிடில் ஓவர்களில் மிகவும் ஸ்லோவாக ரன்களை சேர்த்தது.

இதையும் படிங்க : 2015-ல் நியூசிலாந்து அணி சந்தித்த அதே நிலையை சந்தித்த இந்திய அணி – இப்படி ஒரு தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாதது

இதுவும் தோல்விக்கு ஒரு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதோடு இப்படி பல தவறுகளை செய்த இந்திய அணி நிச்சயம் டாசில் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement