2015-ல் நியூசிலாந்து அணி சந்தித்த அதே நிலையை சந்தித்த இந்திய அணி – இப்படி ஒரு தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாதது

IND-vs-NZ
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் நடைபெற்று வந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற அரையறுதி போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அணி மாபெரும் இறுதிப் போட்டிக்குள் முதல் அணியாக அடியெடுத்து வைத்தது.

அவர்களை எதிர்த்து தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் 2011-ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் நடைபெற்று முடிந்த இந்த உலகக்கோப்பைத் தொடரில் மாபெரும் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை இழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்து தொடரில் வீழ்த்தவே முடியாத அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி இப்படி இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அமைந்தது. அதன்படி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி :

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவு 240 ரன்களை குவிக்க பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று ஆறாவது முறையாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.

- Advertisement -

இந்த தோல்வி இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றுத்தினை ஏற்படுத்தியுள்ள வேளையில் கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு நியூசிலாந்து அணி சந்தித்த அதே நிலையினை இந்திய அணி சந்தித்துள்ள விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று தோல்வியையே சந்திக்காமல் இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தது.

இதையும் படிங்க : அஷ்வினை குறைச்சு எடைப்போட்டு செஞ்ச அதே சின்ன தவறு.. இந்தியாவின் தோல்விக்கான பெரிய காரணம் இதோ

அதனைத்தொடர்ந்து தற்போது இந்திய அணியானது இந்த 2023-ஆம் ஆண்டில் தாங்கள் விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இப்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மிகப்பெரிய தொடரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement