அஷ்வினை குறைச்சு எடைப்போட்டு செஞ்ச அதே சின்ன தவறு.. இந்தியாவின் தோல்விக்கான பெரிய காரணம் இதோ

Ashwin Aus
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவிடம் தோற்று நழுவ விட்டது. குறிப்பாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 10 வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் இம்முறை வெற்றி உறுதி என்று ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 134, லபுஸ்ஷேன் 58 ரன்கள் எடுத்ததால் 43 ஓவரிலேயே எளிதாக வென்றது.

- Advertisement -

இந்தியாவின் தவறு:
அதனால் ஆஸ்திரேலியா தங்களுடைய 6வது கோப்பையை வென்று சரித்திரம் படைத்த நிலையில் 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது 100 கோடி ரசிகர்களின் நெஞ்சங்களை தூளாக்கியது. இந்த தோல்விக்கு பேட்டிங்கில் 280 – 300 ரன்கள் எடுக்காததும் பந்து வீச்சில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்காததும் முக்கிய காரணமானது. அதை விட ரவிச்சந்திரன் அஸ்வின் எனும் வீரரை தேர்வு செய்யாதது தோல்விக்கு பெரிய காரணமானது என்றே சொல்லலாம்.

ஏனெனில் சர்வதேச அரங்கில் 900க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களை அதிக முறை அவுட்டாக்கிய பவுலர் என்ற உலக சாதனை படைத்தவர். அப்படிப்பட்ட அவரை டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் கடந்த ஜூலை மாதம் லண்டனில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இதே ரோஹித் – டிராவிட் அணி நிர்வாகம் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெஞ்சில் அமர வைத்தது. அப்போது இதே டிராவிஸ் ஹெட் சதமடித்து இந்தியாவின் வெற்றியைப் பறித்து ஆட்டநாயகன் விருதை வென்றதை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.

- Advertisement -

ஆனால் அப்போட்டி முடிந்து இன்னும் 6 மாதம் கூட முடியாத நிலைமையில் அதிலிருந்து பாடத்தை கற்க வேண்டிய இந்திய அணியினர் இப்போட்டியில் அஸ்வினை தேர்வு செய்யாமல் சூரியகுமாரை தேர்ந்தெடுத்து தவறு செய்தனர் என்றே சொல்லலாம். இங்கே தொடர்ச்சியாக வென்று வரும் அணியை எப்படி பிரிக்கலாம் அல்லது இதையே வென்றிருந்தால் இப்படி சொல்வீர்களா? என்று சிலர் கேட்கலாம். ஆனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் சுற்றில் இதே போல இந்தியா ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டது.

இதையும் படிங்க: இன்னைக்கு இல்ல.. 12 வருசமா இந்தியா தோற்க அந்த 2 தான் காரணம்.. சோயப் அக்தர் ஏமாற்ற பேட்டி

அத்துடன் சூரியகுமார் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்பதை உணர்ந்தாவது 2023 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஒருவேளை அஸ்வின் விளையாடியிருந்தால் கண்டிப்பாக இடது கை பேட்ஸ்மேனான ஹெட்டை 100 ரன்களுக்குள் அவுட்டாக்கியிருப்பார் என்பதை எந்த ரசிகர்களாலும் மறுக்க முடியாது. அதற்கு அஸ்வினுடன் களமிறங்கிய சென்னையில் நடைபெற்ற 2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் இதே ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்ததே சான்றாகும்.

Advertisement