இன்னைக்கு இல்ல.. 12 வருசமா இந்தியா தோற்க அந்த 2 தான் காரணம்.. சோயப் அக்தர் ஏமாற்ற பேட்டி

Shoaib Akhtar
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை தோற்கடித்த பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வென்றது. அகமதாபாத் நகரில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 241 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்து ஆரம்பத்திலேயே தோல்வியை உறுதி செய்தது.

எஞ்சிய தோல்வியை சேசிங் செய்த போது டிராவிஸ் ஹெட் 134, லபுஸ்ஷேன் 58* ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு பரிசளித்தனர். அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் மிகப்பெரிய கனவு மீண்டும் சுக்கு நூறாக உடைந்து போனது.

- Advertisement -

அக்தர் ஏமாற்றம்:
இந்நிலையில் இத்தொடரில் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்த வீரராக ஷமி அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்து அனைத்து வீரர்களும் உச்சகட்டமாக செயல்பட்ட போதிலும் அதிர்ஷ்டமின்மை காரணமாக ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்ததாக சோயப் அக்தர் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் ஃபைனலில் இந்திய அணியின் அணுகுமுறை சற்று தைரியமாக இல்லாமல் கூச்ச சுபாவத்துடன் இருந்ததாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த 2 அம்சங்களும் தான் 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் பேசியதற்கு பின்வருமாறு. “இந்தியா ஃபைனலில் விளையாடியது. அது எளிதான வேலையல்ல. அவர்கள் இத்தொடரில் அனைத்து அணிகளையும் தோற்கடித்து ஃபைனலுக்கு வந்தனர்”

- Advertisement -

“இருப்பினும் துரதிஷ்டவசமாக அதே செயல்பாடுகளை அவர்களால் ஃபைனலில் வெளிப்படுத்த முடியவில்லை. சொல்லப்போனால் கடந்த 12 வருடங்களாக அவர்கள் ஐசிசி கோப்பையை நெருங்கியும் கடைசி நேரத்தில் வெல்ல முடியவில்லை. இந்தியாவுக்காக பேட்டிங்கில் விராட் கோலி அதிக ரன்கள் ஷமி அதிக விக்கெட்களும் எடுத்தனர். துரதிஷ்டவசமாக அவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக செல்லவில்லை”

இதையும் படிங்க: சச்சினை போன்றே போராடி வீழ்ந்த விராட் கோலி.. அன்றும் இன்றும்.. 20 ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவம் – விவரம் இதோ

“ஆனால் பெரிய போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எப்படி அழுத்தத்தை சமாளிக்க வேண்டும் என்பது தெரியும். அதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை நன்றாக இருந்தது. மறுபுறம் இந்தியாவின் அணுகுமுறை கூச்ச சுபாவமாக இருந்தது” என்று கூறினார். அவர் கூறுவது போல இப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் பவர் பிளே ஓவர்கள் தவிர்த்து எஞ்சிய ஓவர்களில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர். அந்த வகையில் அழுத்தமான நேரத்தில் சற்று அதிரடி காட்டாமல் தடுப்பாட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Advertisement