- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ராகுல் டிராவிடுக்கு அந்த விருதினை வழங்கினால் அது சரியாக இருக்கும் – சுனில் கவாஸ்கர் கோரிக்கை

அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றிய ராகுல் டிராவிட் வீரராகும், கேப்டனாகவும் உலக கோப்பை கைப்பற்றாத வகையில் தற்போது பயிற்சியாளராக உலக கோப்பை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் உலகக் கோப்பையை கைப்பற்றியதற்காக அவருக்கு பிசிசிஐ சார்பில் 5 கோடி ரூபாய் பரிசு தொகையாக அளிக்கப்பட்டது. மேலும் தான் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக பயணிக்க விரும்பாததால் அவர் இந்திய அணியை விட்டு வெளியேறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்பத்திற்காக நேரம் செலுத்தவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதால் பிசிசிஐ-யும் அவரை தொடர்ந்து பணியாற்ற கட்டாயப்படுத்தவில்லை. ராகுல் டிராவிடின் தலைமையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 இறுதி போட்டியில் வெற்றி என பல்வேறு முக்கிய தொடர்களில் விளையாடி அசத்தியுள்ளது.

அதேபோன்று 19 வயதுக்குட்போர் இந்திய அணிக்காகவும் அவர் பயிற்சியாளராக இருந்து உலகக் கோப்பை பெற்றுள்ளார். இப்படி கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னேற்றத்திற்கு உதவிய அவருக்கு தற்போது பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பாரத ரத்னா விருது சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றிய தலைவர்களுக்காக அளிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக இத்தனை ஆண்டுகளாக பணியாற்றிய ராகுல் டிராவிடுக்கு இந்த விருது பொருத்தமாக அமையும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இந்தியாவை சாய்க்க.. இந்தியாவின் ரூட்டை கையிலெடுத்த இலங்கை.. ஜாம்பவானை பயிற்சியாளராக அறிவிப்பு

அவருக்கு இந்திய விருதினை கொடுத்தால் அவருக்கு மிகப் பெரிய மரியாதை அளிக்கும் விதமாக இருக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்ட நிலையில் இவருக்கும் அந்த விருது அளிக்கப்பட வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -