1996 உலக கிரிக்கெட்டின் சாம்பியனான இலங்கை அணி தற்சமயத்தில் திண்டாட்டமாக செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் ஜெயவர்த்தனே, மலிங்கா, முரளிதரன், சங்ககாரா, ஜெயசூர்யா போன்ற ஜாம்பவான்களால் எதிரணிகளை சொல்லி அடித்த இலங்கை கடைசியாக 2014 டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன் பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திண்டாடும் இலங்கை தொடர்ந்து வெற்றிகளைப் பெற தடுமாறி வருகிறது.
குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சிராஜ் வேகத்தில் இந்தியாவிடம் வெறும் 50 ரன்களுக்கு சுருண்டு இந்தியா தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து 2023 உலகக் கோப்பையிலும் சிராஜ் வேகத்தில் 55 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அவமானத் தோல்வியை பதிவு செய்தது. அதனால் தங்கள் வாரியத்தை கலைத்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டதால் இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்தது.
புதிய பயிற்சியாளர்:
இருப்பினும் அந்த பிரச்சனையை சீக்கிரமே சரி செய்த இலங்கை மீண்டும் விளையாடத் துவங்கியது. ஆனால் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் மீண்டும் வங்கதேசம் போன்ற அணிகளிடம் தோற்ற இலங்கை முதல் சுற்றுடன் வீட்டுக்கு கிளம்பியது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்ற இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இலங்கை 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாம்பவான் சனாத் ஜெயசூர்யா நியமிக்கப்பட உள்ளார். இது பற்றி ஏஃஎப்பி இணையத்தில் ஜெயசூர்யா பேசியது பின்வருமாறு. “பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு என்னிடம் கேட்கப்பட்டது. அதைச் செய்வதற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறினார்.
அந்த வகையில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடிய ஜெயசூர்யாவை தங்களுடைய புதிய பயிற்சியாளராக இலங்கை வாரியம் அறிவிக்க உள்ளது. குறிப்பாக சமீப காலங்களாகவே வெளிநாட்டவர்களுக்கு பதிலாக ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட், லக்ஷ்மன் என முன்னாள் ஜாம்பவான் இந்திய வீரர்களை பிசிசிஐ தங்களது பயிற்சியாளராக நியமித்து வெற்றி கண்டு வருகிறது. அந்த வழியை பின்பற்றும் இலங்கை மகத்தான ஜாம்பவான் ஆல் ரவுண்டரான ஜெயசூர்யாவை பயிற்சியாளராக நியமிக்க உள்ளது.
இதையும் படிங்க: அப்படி ஒன்னும் புதுசா சாதிக்கலயே.. அபிஷேக், ருதுராஜை கலாய்த்த ஜுனாய்ட் கான்.. இந்திய ரசிகர்கள் விளாசல்
இதைத்தொடர்ந்து அடுத்ததாக நடைபெறும் இந்திய தொடரிலிருந்து அவர் இலங்கையின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். எனவே அவருடைய தலைமையில் 2023 மற்றும் உலக கோப்பையில் படுதோல்விகளை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் இலங்கை தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



