ரஜினிகாந்த் இருக்கட்டும்.. முதலில் அந்த 2 முன்னாள் இந்திய வீரர்களுக்கு 2023 உ.கோ தங்க டிக்கெட் கொடுங்க – பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

Sunil Gavaskar 3
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை கோலாகலமாக நடைபெற உள்ளது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அந்த எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்த்து காணப்படுகிறது. அதை நேரில் சென்று காண்பதற்காக டிக்கெட்டுகளை வாங்குவதற்கு ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே படாத பாடு பட்டு வருவதை சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறோம்.

- Advertisement -

கவாஸ்கர் கோரிக்கை:
குறிப்பாக ஆன்லைனில் 2 மணி நேர முதல் 24 மணி நேரங்கள் காத்திருந்தாலும் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதனால் பணக்காரர்களுக்காகவும் பிளாக்கில் விற்பதற்காகவும் தில்லாலங்கடி வேலைகளை செய்யாமல் இந்திய கிரிக்கெட்டின் முதன்மை பங்குதாரர்களாக இருக்கும் ரசிகர்களுக்கு சரியான வழக்கையில் டிக்கெட் கிடைக்க வழிவகை செய்யுமாறு முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்திருந்தார்.

அந்த நிலைமையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த உலகக் கோப்பையை காண்பதற்கான தங்க டிக்கெட்டை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரில் வழங்கினார். அத்துடன் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் போன்ற திரைப்பட நடிகர்களுக்கும் அதை கொடுத்து வரவேற்ற அவர் இன்னும் சில நட்சத்திரங்களுக்கு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் இன்று கிரிக்கெட் ஆலமரமாக வளர்ந்து நிற்க முக்கிய காரணமான 1983 உலக கோப்பையை வென்ற கேப்டன் கபில் தேவ் மற்றும் 2011 உலக கோப்பையை வென்ற எம்எஸ் தோனி ஆகியோருக்கு மறக்காமல் தங்க டிக்கெட் கொடுங்கள் என்று பிசிசிஐக்கு சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இஸ்ரோ தலைவர் ஆகியோரை மறக்காதீர்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: கேஎல் ராகுல் மீது இருந்த அந்த ஒரு கவலையும் போய்டுச்சு.. இனிமேல் யாரும் விமர்சிக்க முடியாது – சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி பேட்டி

“பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அதில் அமிதாப்பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் உலகக் கோப்பையை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பெற்றனர். அந்த பட்டியலில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்தியாவை நிலவுக்கு அழைத்துச் சென்ற இஸ்ரோ தலைவர், 2 உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த கபில் தேவ் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதே போல அந்த டிக்கெட்டை நினைத்தாலே ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பெயரும் எனக்கு முதலாவதாக தோன்றுகிறது” என கூறினார்.

Advertisement