கேஎல் ராகுல் மீது இருந்த அந்த ஒரு கவலையும் போய்டுச்சு.. இனிமேல் யாரும் விமர்சிக்க முடியாது – சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி பேட்டி

Sunil Gavaskar
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முன்னதாக நடைபெற்ற ஆசிய கோப்பைக்கு முன்பாக இந்திய அணியில் நிறைய பலவீனங்களும் குறைகளும் இருந்தன. இருப்பினும் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்ற இந்திய அணியில் தற்போது நிறைய குறைகள் நிறைகளாக மாறியுள்ளது என்றே சொல்லலாம்.

குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவை போலவே காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல் நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறி அவர் 2019க்குப்பின் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்று ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். ஆனாலும் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைப்பதற்காக தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சுமாராக செயல்பட்ட அவர் ரசிகர்களின் வெறுப்பை அதிகமாக சம்பாதித்து தோல்விகளில் பங்காற்றினார்.

- Advertisement -

கவாஸ்கர் மகிழ்ச்சி:
அதனால் துணை கேப்டன்ஷிப் பதவியை இழந்த அவர் ரிஷப் பண்ட்க்கு பதிலாக மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்று ஓரளவு சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் ஐபிஎல் 2023 தொடரில் காயத்தை சந்தித்து ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று வரை விளையாடாமல் இருந்த அவரை உலகக் கோப்பையில் தேர்வு செய்தால் தோல்வி கிடைக்கும் என்று கௌதம் கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

அந்த சூப்பர் 4 சுற்றில் முழுமையாக குணமடைந்து களமிறங்கிய அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 111* ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். இந்நிலையில் ஃபிட்னஸ் மட்டுமே கேள்விக்குறியாக இருந்த ராகுல் அதை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியுடன் பேட்டிங் செய்து நிரூபித்துள்ளதாக சுனில் கவாஸ்கர் பாராட்ட தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதாவது அப்போட்டியில் உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய வீரராக அறியப்படும் விராட் கோலிக்கு ஈடு கொடுத்து ஓடிய ராகுல் தற்போது முழுமையான ஃபிட்னஸ் எட்டியுள்ளதால் இனிமேல் யாரும் விமர்சிக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர் தற்போது ஃபிட்னஸ் அளவில் நன்றாக முன்னேறியுள்ளது தெரிகிறது. அவர் எந்தளவுக்கு தரமானவர் என்பதையும் நாம் அறிவோம். அதை நீண்ட காலமாக விளையாடி நிரூபித்துள்ள அவர் ஃபிட்னஸ் அம்சத்தில் மட்டுமே தடுமாறினார்”

இதையும் படிங்க: வீடியோ : 22 ஃபோர்ஸ் 2 சிக்ஸ்.. இங்கிலாந்தில் சேவாக் போல அட்டகாசம் செய்த கருண் நாயர் – சான்ஸ் கொடுக்காத தேர்வுக்குழுவுக்கு பதிலடி

“இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் அதையும் நிரூபித்துள்ளார். ஏனெனில் அதில் நீண்ட இன்னிங்ஸ் விளையாடிய அவர் ரன்கள் எடுப்பதற்கு யாருடன் ஓடினார்? உலகிலேயே 22 யார்ட்களில் வேகமாக ஓடக்கூடிய விராட் கோலியுடன் ஓடினார். அதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பிங்கிலும் அசத்திய அவர் தற்போது 100% ஃபிட்னஸை நிரூபித்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement