22 ஃபோர்ஸ் 2 சிக்ஸ்.. இங்கிலாந்தில் சேவாக் போல அட்டகாசம் செய்த கருண் நாயர் – சான்ஸ் கொடுக்காத தேர்வுக்குழுவுக்கு பதிலடி

Karun nair
- Advertisement -

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரின் 2023 சீசனில் இந்திய வீரர் கருண் நாயர் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். அதில் புகழ் பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக நார்த்தம்டன்ஷைர் அணிக்காக அவர் விளையாடினார். அந்த போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய நார்த்தம்டன்ஷைர் அணிக்கு ஹசன் அசாத் 48, எமிலியோ 16, லுக் ப்ரோக்டர் 8 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலைமையில் 4வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக விளையாடிய கருண் நாயர் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில் எதிர்ப்புறம் ராப் கீ 16, சைப் சாய்ப் 2, லெவிஸ் மெக்மனஸ் 6 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி கைகொடுக்க தவறினார்.

- Advertisement -

சேவாக் போல:
ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து எதிரணி பவுலர்களுக்கு சவாலை கொடுத்த கருண் நாயர் அரை சதம் கடந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல இங்கிலாந்தில் நீண்ட காலம் கழித்து விளையாடினாலும் சூழ்நிலைகளை புரிந்து சிறப்பாக விளையாடிய அவர் 99* ரன்களில் இருந்த போது எதிர்கொண்ட ஒரு பவுன்சர் பந்தை அசால்டாக குனிந்து அப்பர் கட் வாயிலாக பவுண்டரி அடித்து சதமடித்தார்.

குறிப்பாக முன்னாள் நட்சத்திர இந்திய வீரர் வீரேந்திர சேவாக் போலவே 90களில் இருக்கும் போது பதற்றமடையாமல் கூலான பவுண்டரி அடித்து அவர் சதத்தை தொட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. சொல்லப்போனால் கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 303* ரன்கள் அடித்த அவர் வரலாற்றிலேயே வீரேந்திர சேவாக்கிற்கு பின் முச்சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்தார்.

- Advertisement -

இருப்பினும் அதன் பின் சுமாராக செயல்பட்ட அவர் மொத்தம் 6 போட்டிகளில் 374 ரன்களை 62.33 என்ற சராசரியில் எடுத்த நிலையில் மறுவாய்ப்பு கொடுக்காமல் இந்திய அணி நிர்வாகமும் தேர்வு குழுவும் மொத்தமாக கழற்றி விட்டது. அதனால் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தொடர்ந்து உள்ளூரில் போராடி வரும் அவர் சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா பிரிமியர் லீக் தொடரில் இதே போலவே அதிரடியான பவுண்டரியை பறக்க விட்டு சதமடித்தார்.

அந்த நிலைமையில் தற்போது இங்கிலாந்தில் சதமடித்து தேர்வு குழுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசத்தும் அவர் இப்போட்டியில் 22 பவுண்டரி 2 சிக்சருடன் 144* (238) ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதனால் முதல் நாள் முடிவில் நார்த்தம்டன்ஷைர் 351/9 ரன்கள் குவித்து இந்த போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement