ஜோயல் கார்னர் ஓசில தரமுடியாதுன்னு சொல்லிட்டாரு, 1983 உ.கோ ஃபைனலில் தனது மொக்க இன்னிங்ஸ் பற்றி – மனம் திறந்த கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இன்று இந்தியா முதன்மை அணியாக திகழ்வதற்கு கடந்த 1983ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்தியா வென்றது ஆழமான விதை போட்டது என்று சொல்லலாம். 1975இல் துவங்கப்பட்ட உலகக் கோப்பையின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற க்ளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் ரிச்சர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ் போன்ற முரட்டுத்தனமான வீரர்களால் உலகத்தை மிரட்டும் அளவுக்கு செயல்பட்டு 1979 உலக கோப்பையும் வென்று சாதனை படைத்தது.

அந்த நிலைமையில் மீண்டும் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற வரலாற்றின் 3வது உலக கோப்பையில் கபில் தேவ் தலைமையில் இந்தியா கத்துக் குட்டியாக களமிறங்கியது. அதனால் இவர்கள் எங்கே சாதிக்கப் போகிறார்கள் என்று யாருமே கண்டுகொள்ளாத நிலையில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா தன்னுடைய முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து 2வது போட்டியில் கபில் தேவின் முரட்டுத்தனமான 175 ரன்கள் அடியால் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. இருப்பினும் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளிடம் மீண்டும் தோற்ற இந்தியா ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.

- Advertisement -

மொக்க இன்னிங்ஸ்:
அத்துடன் மீண்டும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்த இந்தியா நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்து ஃபைனலில் வெறித்தனமான வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது. அந்த வெற்றி தான் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த மொத்த இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்து சச்சின் போன்ற இளம் வீரர்களிடம் அந்த விளையாட்டில் கால்பதிக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியது.

அந்த உலகக் கோப்பையில் ஃபைனலில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் அதிகபட்ச ஸ்கோர் அடித்தது, ரிச்சர்ட்ஸ் கேட்ச்சை நீண்ட தூரம் ஓடிச் சென்று கபில் தேவ் பிடித்தது, அமர்நாத் ஆல் ரவுண்டராக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்றது போன்ற செயல்பாடுகளை மறக்க முடியாது. ஆனால் ஜாம்பவானாக கருதப்படும் சுனில் கவாஸ்கர் அப்போட்டியில் வெறும் 2 (12) ரன்களில் அவுட்டாகி சுமாராகவே செயல்பட்டிருந்தார். சொல்லப்போனால் 1975இல் இந்தியா விளையாடிய முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே ஆமை போல 36 (174) ரன்கள் எடுத்து மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஜோயல் கார்னரை எதிர்கொள்ள திண்டாடியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் கவுண்டி தொடரில் ஒரே அணிக்காக அந்த சமயத்தில் விளையாடியதால் உங்களுடைய நண்பன் டக் அவுட்டாவதை தவிர்க்க உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டதாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இது ஃபைனல் என்பதால் ஓசியில் ரன்கள் கொடுக்க முடியாது என்று ஜோயல் கார்னர் மறுத்து விட்டதாக ஜாலியான பின்னணியை பகிர்ந்துள்ள கவாஸ்கர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“மிஸ்டர் ஜோயல் கார்னர் நான் சோமர்செட் அணிக்காக கவுண்டி தொடரில் விளையாடிய போது என்னுடைய நண்பராக இருந்தார். எனவே அந்த ஃபைனலில் ஒவ்வொரு பந்தையும் அவர் என்னுடைய மூக்குக்கு நேராக வரும் அளவுக்கு உயரத்தில் வீசியதால் என்னால் அவற்றை தொட கூட முடியவில்லை. அந்த நிலைமையில் எதிர்ப்புறம் நான் சென்ற போது கார்னர் என்னை தாண்டி நடந்து சென்றார்”

இதையும் படிங்க:எதுக்கெடுத்தாலும் இந்தியா மீது அந்த குறை சொல்லாதீங்க – உலகின் மொத்த விமர்சனங்களுக்கு ஜாம்பவான் க்ளைவ் லாய்ட் பதிலடி

“இதற்கு முன் நண்பராக பழகியிருந்த காரணத்தால் நான் அவரிடம் “ஹேய் பர்ட், உங்களுடைய பழைய நண்பன் 1 ரன் எடுத்து கணக்கை துவங்குவதற்கு வழி விட்டால் என்ன” என்று கேட்டேன். ஏனெனில் அந்த சமயத்தில் நான் 0 ரன்களில் இருந்தேன். அதற்கு அவர் “இல்லை நண்பா. இது உலகக் கோப்பை ஃபைனல் என்பதால் உங்களுக்கு இலவசமாக ஓசியில் எதுவும் தர முடியாது” என்று கூறி விட்டார். அது தான் அந்த ஃபைனலில் நான் களத்தில் இருந்த போது நடந்தது. அதாவது அனைத்துமே மிகவும் கடினமாக வந்ததால் நான் 2 ரன்களில் ஆண்டி ராபர்ட்ஸ் பந்தில் அவுட்டாகி விட்டேன்” என்று கூறினார்.

Advertisement