எதுக்கெடுத்தாலும் இந்தியா மீது அந்த குறை சொல்லாதீங்க – உலகின் மொத்த விமர்சனங்களுக்கு ஜாம்பவான் க்ளைவ் லாய்ட் பதிலடி

Clive Llyod
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோற்று வெறும் கையுடன் நான் திரும்பியது. அந்த போட்டியில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியா கொஞ்சம் கூட போராடாமல் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதை விட அந்த போட்டி மட்டுமல்லாமல் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்ததற்கு ஐபிஎல் தொடர் தான் முக்கிய காரணம் என ஏராளமான இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடரில் விளையாடி ஒரு நாளில் வெறும் 4 ஓவர்கள் மட்டும் வீசிய இந்திய பவுலர்கள் 10 நாட்கள் முன்பாக ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்துக்கு பயணித்து முழுமையாக தயாராமல் நேரடியாக ஃபைனலில் களமிறங்கி திடீரென ஒரே நாளில் 17 ஓவர்களை சோர்வுடன் வீசி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமானது. அத்துடன் ஐபிஎல் தொடரில் பணத்திற்காக உயிரைக் கொடுத்து விளையாடும் முக்கிய வீரர்கள் நாட்டுக்காக சிறப்பாக செயல்படுவதில்லை என்ற விமர்சனம் கடந்த பல வருடங்களாகவே இந்திய வட்டாரத்தில் காணப்படுகிறது.

குறை சொல்லாதீங்க:
அத்துடன் இப்போதெல்லாம் நாட்டுக்காக ஒரு வருடம் விளையாடினாலும் கிடைக்காத சம்பளம் ஐபிஎல் தொடரில் 2 மாதங்கள் விளையாடக் கொடுக்கப்படுவதால் நிறைய இளம் வீரர்கள் இந்தியாவுக்கு விளையாடும் எண்ணத்துடன் வளர்வதில்லை என்ற விமர்சனங்களும் காணப்படுகின்றன. அத்துடன் ட்ரெண்ட் போல்ட், ஜெசன் ராய் போன்ற வெளிநாட்டு வீரர்களும் பணத்திற்காக தாய் நாட்டுக்கு விளையாடும் மத்திய ஒப்பந்தத்திலிருந்தே மொத்தமாக வெளியேறியதற்கும் ஐபிஎல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதை விட 60 போட்டிகளாக இருந்து தற்போது 74 போட்டிகளாக விரிவடைந்துள்ள ஐபிஎல் தொடர் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை குறைகிறது. அதனால் சர்வதேச கிரிக்கெட்டின் அழிவுக்கு இந்தியா நடத்தும் ஐபிஎல் தான் முக்கிய காரணம் என்று இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் விமர்சிக்கின்றனர். இப்படி இந்தியா முதல் உலகம் வரை ஐபிஎல் தொடர் என்பது அதனுடைய புகழ் மற்றும் தரத்திற்கு நிகராக விமர்சனங்களையும் சந்தித்து வருவது வாடிக்கையாகி வருகிறது.

- Advertisement -

இருப்பினும் ஐபிஎல் தொடரால் பல இளம் வீரர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை யாரும் பார்ப்பதில்லை. அதுபோக ஒரு காலத்தில் 50 ஓவரில் 250 ரன்களை அடிப்பதற்கே திண்டாடிய அணிகள் இப்போது 20 ஓவரில் எளிதாக 200 – 250 ரன்கள் அடிப்பதற்கான பரிணாமம் ஐபிஎல் தொடரால் தான் ஏற்பட்டது என்றால் மிகையாகாது. மேலும் ஐபிஎல் தொடரால் ஒரே சமயத்தில் 2 அணிகளை களமிறக்கும் இந்தியா வளர்ந்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கும் நிறைய தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் கிடைத்து வருகின்றனர்.

IPL-2023

இந்நிலையில் கால்பந்தில் தங்களது நாட்டுக்காக விளையாடுவதை விட பணத்திற்காக லீக் தொடர்களில் விளையாடும் மைக்கேல் ஜோர்டான் போன்ற ஜாம்பவான்களை இங்கு யாரும் பேசுவதில்லை என்று தெரிவிக்கும் க்ளைவ் லாய்ட் எதற்கெடுத்தாலும் ஐபிஎல் தொடரை விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்று கூறியுள்ளார். 1975, 1979 உலகக் கோப்பைகளை வென்ற மகத்தான கேப்டனான அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் என்பது பலரது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக அது தங்களுடைய வாழ்வில் ஐபிஎல் தொடரில் விளையாடி வெற்றி காணலாம் என்ற கதவை பல வீரர்களிடம் திறக்கிறது. எனவே இந்த கதவு சிறப்பானது என்று நினைக்கிறேன். ஏனெனில் அதனால் பலர் தங்களது வாழ்க்கையை வாழ்கின்றனர். அதே சமயம் அவர்கள் தங்களுடைய சிறந்த திறமைகளை இந்த விளையாட்டுக்காக கொடுக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்”

llyod

இதையும் படிங்க:உன்னோட திறமைக்கு நீ எதையும் சாதிக்காம போனா நான் ரொம்ப கஷ்டப்படுவேன். இளம்வீரர் குறித்து – ரவி சாஸ்திரி உருக்கம்

“அதனால் அவர்களுக்கு ஏன் பணம் கொடுக்கக் கூடாது. மேலும் மைக்கேல் ஜோர்டான் போன்ற கால்பந்தாட்ட வீரர்கள் ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் போது யாரும் எதுவும் சொல்வதில்லை. அப்படிப்பட்ட நிலையில் கிரிக்கெட்டில் மட்டும் ஏன் அதை எதிர்க்கிறீர்கள்” என்று கூறினார்.

Advertisement