இப்போ அம்பயர் உங்களுக்கு சாதகமா இருக்காங்களா? பென் ஸ்டோக்ஸை கலாய்த்த கவாஸ்கர்.. காரணம் என்ன?

Sunil Gavaskar 5
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து அதற்கடுத்த 2 போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்தது. அதனால் 2 – 1* என்ற கணக்கில் பின்தங்கியுள்ள அந்த அணி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்கிய நான்காவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் நாள் முடிவில் 302/7 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 106* ரன்கள் குவித்து காப்பாற்றினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப் 3* விக்கெட்டுகள் எடுத்து சவாலை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

கலாய்த்த கவாஸ்கர்:
முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் குல்தீப் யாதவுக்கு எதிராகவும் ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராகவும் இங்கிலாந்தின் துவக்க வீரர் ஜாக் கிராவ்லி எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். இருப்பினும் அதை எதிர்த்து ஜாக் கிராவ்லி ரிவியூ செய்தார். அது போதிக்கப்பட்ட போது பந்து முழுமையாக ஸ்டம்ப் மீது அடிக்காமல் லேசாக உரசிக்கொண்டு சென்றது.

இருப்பினும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்ததால் (அம்பயர்ஸ் கால்) மூன்றாவது நடுவரும் அதே தீர்ப்பை மீண்டும் வழங்கினார். ஆனால் அப்போது அந்த 2 தீர்ப்புகளும் இந்தியாவுக்கு சாதகமாக வழங்கப்பட்டதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விமர்சித்திருந்தார். மேலும் எல்பிடபுள்யூ முறையில் ரிவியூ செய்யும் போது களத்தில் இருக்கும் நடுவர் கொடுக்கும் முடிவை கணக்கில் எடுக்காமல் ஸ்டம்ப் மீது பந்து பட்டாலே அவுட் கொடுக்க வேண்டும் என்றும் பென் ஸ்டோக்ஸ் விமர்சித்திருந்தார்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் ரவீந்திர ஜடேஜா வீசிய ஒன்பதாவது ஓவரின் ஒரு பந்தை எதிர்கொண்ட பென் டக்கெட் அடிக்காமல் தவற விட்டு காலில் வாங்கினார். அதனால் இந்திய அணியினர் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கேட்டும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து இந்திய அணியினர் ரிவ்யூ செய்த போது பந்து ஸ்டம்ப் மீது முழுமையாக அடிக்காமல் உரசிக்கொண்டு மட்டுமே சென்றது தெரிந்தது. எனவே களத்தில் இருந்த நடுவர் கொடுத்த நாட் அவுட் தீர்ப்பை மீண்டும் மூன்றாவது நடுவர் வழங்கினார்.

இதையும் படிங்க: ஜோ ரூட்டின் சாகசத்தால் கையில் இருந்த அருமையான வாய்ப்பை கோட்டை விட்ட இந்திய அணி – விவரம் இதோ

தற்போது அதை சுட்டிக் காட்டியுள்ள சுனில் கவாஸ்கர் இப்போது உங்களுக்கு சாதகமாக அம்பயர் நடந்து கொண்டாரா? என்ற வகையில் பென் ஸ்டோக்ஸை ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சியின் நேரலை வர்ணனையில் கலாய்த்தது பின்வருமாறு. “இதை பாருங்கள். இது அம்பயர்ஸ் கால். இங்கே அம்பயர்ஸ் கால் நீக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள் இதை பார்க்க வேண்டும். இந்த ரிப்ளையில் ஸ்டம்ப் மீது பட்டது. அவர்களது கூற்றுப்படி இந்த இடத்தில் பென் டக்கெட் அவுட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement