ஜோ ரூட்டின் சாகசத்தால் கையில் இருந்த அருமையான வாய்ப்பை கோட்டை விட்ட இந்திய அணி – விவரம் இதோ

Root
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று ராஞ்சி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் பந்து வீசிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் வீரர்களை துவக்கத்திலேயே அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்து அட்டகாசமான ஆரம்பத்தை பெற்றது.

- Advertisement -

குறிப்பாக இந்திய அணையின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் முதல் மூன்று வீரர்களையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்து அசத்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சை காரணமாக இங்கிலாந்து அணி 57 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இடம் தடுமாறியது.

பின்னர் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ நான்காவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோ 38 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக நிச்சயம் இங்கிலாந்து அணி எளிதில் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அந்த பொன்னான வாய்ப்பை இந்திய அணி வீணடித்து விட்டது என்றே கூறலாம். ஏனெனில் ஒருபுறம் பென் போக்ஸை நிற்க வைத்து மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதமடித்து அசத்தியுள்ளார். அதேவேளையில் அவருக்கு உறுதுணையாக நின்ற பென் போக்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து தாம் ஹார்ட்லியும் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஜோ ரூட் 106 ரன்களுடனும், ராபின்சன் 31 ரன்களுடனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

இதையும் படிங்க : குடும்பத்தில் 2 பேரை இழந்துட்டேன்.. இதை அவருக்கு டெடிகேட் பண்றேன்.. ஆகாஷ் தீப் உருக்கமான பேட்டி

அதன்காரணமாக இங்கிலாந்து அணியானது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டை இழந்து 302 ரன்கள் என்கிற வலுவான நிலையில் உள்ளது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 250 ரன்களை கூட தொடாது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது 300 ரன்களை கடந்து அந்த அணி நல்ல நிலையை எட்டியுள்ளது. இருப்பினும் நாளை இரண்டாம் நாள் போட்டி ஆரம்பித்ததும் இந்திய அணி விரைவில் அவர்களை ஆட்டமிழக்க வைத்துவிட்டு விட்டு தங்களது முதல் இன்னிங்ஸ்சை துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement