குடும்பத்தில் 2 பேரை இழந்துட்டேன்.. இதை அவருக்கு டெடிகேட் பண்றேன்.. ஆகாஷ் தீப் உருக்கமான பேட்டி

Akash Deep 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 302/7 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோ ரூட் நிதானமாக விளையாடி சதமடித்து 106* ரன்கள் குவித்துள்ளார். இந்தியா சார்பில் இதுவரை அதிகபட்சமாக அறிமுக போட்டியில் களமிறங்கிய ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முன்னதாக இப்போட்டியில் ஓய்வெடுக்கும் பும்ராவுக்கு விளையாடும் வாய்ப்பை பெற்ற ஆகாஷ் தீப் ஆரம்பத்திலேயே நோபால் போட்டு தன்னுடைய முதல் விக்கெட்டை பறி கொடுத்தார்.

- Advertisement -

டெடிகேட் செய்த மகன்:
இருப்பினும் மனம் தளராத அவர் அதற்கடுத்த சில ஓவர்களில் பென் டக்கெட், ஓலி போப் ஆகிய 2 முக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் அவுட்டாக்கி கம்பேக் கொடுத்தார். அத்துடன் 42 (42) ரன்கள் அடித்து சவாலை கொடுத்த மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லியையும் கிளீன் போல்ட்டாக்கிய அவர் பும்ரா இல்லாத குறையை போக்கும் அளவுக்கு இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரையும் ஒரே வருடத்தில் இழந்து பெரிய சோகத்தை சந்தித்த தாம் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற சூழ்நிலையில் இருப்பதாக ஆகாஷ் தீப் கூறியுள்ளார். எனவே அறிமுக போட்டியில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை தன்னுடைய தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இன்றைய நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. நான் ஒரே வருடத்தில் என்னுடைய தந்தை மற்றும் சகோதரரை இழந்தேன். அதன் பின் என்னுடைய வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக வீட்டை விட்டு வெளியேறி கிரிக்கெட்டில் விளையாட துவங்கினேன். எனக்கு பெங்கால் அணி நல்ல ஆதரவை கொடுத்தது. அவர்களுக்காக ரஞ்சிக் கோப்பை நான் விளையாடினேன். என்னுடைய பயணத்தில் எனது குடும்பம் பெரிய பங்காற்று உள்ளது”

இதையும் படிங்க: பஸ்பாலுக்கு டாட்டா காட்டிய ரூட்.. தனது வழியில் முதல் இங்கிலாந்து வீரராக பிரம்மாண்ட சாதனை

“ஏனெனில் உங்களுடைய வீட்டில் 2 பெரியவர்களை இழந்தால் மேற்கொண்டு நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. எனவே தற்போது நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை. நான் வீட்டிற்கு எடுத்துச் செல்ல நிறைய இருக்கிறது என்ற மனநிலையில் உள்ளேன். இதை என்னுடைய தந்தைக்காக சமர்ப்பிக்கிறேன். அவர் தன்னுடைய மகன் வாழ்நாளில் ஏதாவது சாதிக்க மாட்டாரா என்று நினைத்தார். அவர் உயிருடன் இருக்கும் போது நான் எதுவும் செய்யவில்லை. எனவே இதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement