ஐபிஎல் 2024 : பாண்டியா தலைமையில் மும்பை தெரியல.. அந்த டீம் பிளே ஆஃப் போய்டுவாங்க.. கவாஸ்கர் கணிப்பு

Sunil Gavaskar 3
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஐபிஎல் தொடரின் 2024 சீசன் நடைபெற உள்ளது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வதற்காக வழக்கம் போல 10 அணிகளும் தயாராகி வருகின்றன. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை மற்றும் சென்னை அணிகள் எப்படி செயல்படப் போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்டுள்ள மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. எனவே காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஹர்திக் பாண்டியா குஜராத்தை போல மும்பை அணிக்காகவும் தன்னுடைய முதல் சீசனிலேயே கேப்டனாக கோப்பையை வென்று கொடுப்பாரா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

பிளே ஆஃப் சுற்றில்:
மறுபுறம் கடந்த வருடம் 41 வயதிலும் சிறப்பாக விளையாடிய தோனி தலைமையில் ஃபைனலில் பாண்டியா தலைமையிலான குஜராத்தை தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறையும் தோனி தலைமையில் விளையாடும் அந்த அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில் மும்பை போன்ற மற்ற அணிகளை காட்டிலும் ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக சென்னை இருக்கும் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஏலத்தின் மேஜையில் அவர்கள் வாங்கிய வீரர்கள் சென்னையை பலப்படுத்துவதாக அமைகிறது. அவர்கள் கடந்த வருடம் வேகப்பந்து வீச்சு துறையில் தடுமாறியதை ஓரளவு சரி செய்துள்ளனர்”

- Advertisement -

“அதே போல அம்பத்தி ராயுடு ஓய்வுக்கு பின் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட இடத்தையும் அவர்கள் சரி செய்துள்ளதாக தெரிகிறது. இம்முறை அவர்களிடம் இளமையும் அனுபவமும் கலந்த அணி இருக்கிறது. எனவே கண்டிப்பாக டாப் 4 இடத்திற்கு சிஎஸ்கே வரும் என்று நான் கருதுகிறேன். எந்த அணியையும் நீங்கள் உறுதியாக வெற்றியாளர் என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த 16 வருட ஐபிஎல் தொடரில் 12 முறை சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்கள”

இதையும் படிங்க: 13 இன்னிங்ஸ்சா அவரு ஒரு அரைசதம் கூட அடிக்கல.. இதுதான் அவருக்கு லாஸ்ட் டெஸ்ட் சீரிஸ் – இக்கட்டான நிலையில் இந்திய வீரர்

“எனவே இம்முறை அவர்கள் 13வது முறையாக வரலாம். தற்போது அவர்கள் அனைத்தையும் கவர் செய்து விட்டதாக கருதுவார்கள். குறிப்பாக சர்துள் தாக்கூரை அவர்கள் மீண்டும் வாங்கியுள்ளனர். அதனால் தீபக் சஹார் முழுமையாக விளையாடாவிட்டாலும் கவலையை ஏற்படாது. ஏனெனில் அந்த இடத்தை தாக்கூர் பிடித்துக் கொள்வார்” என்று கூறினார். முன்னதாக ஏலத்தில் டார்ல் மிட்சேல், ரச்சின் ரவீந்திரா, முஷ்தபிசூர் ரஹ்மான், தாகூர், சமர் ரிஸ்வி ஆகிய வீரர்களை சென்னை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement