13 இன்னிங்ஸ்சா அவரு ஒரு அரைசதம் கூட அடிக்கல.. இதுதான் அவருக்கு லாஸ்ட் டெஸ்ட் சீரிஸ் – இக்கட்டான நிலையில் இந்திய வீரர்

Shreyas
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

அதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அப்படி அறிவிக்கப்படும் அணியில் ஒரு சில மாற்றங்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவது இல்லை. ஏனெனில் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்களை தவிர்த்து பெரிய அளவில் அனுபவம் இல்லாத இளம் வீரர்களே அணியில் இருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக தனக்கு கிடைத்த சில வாய்ப்புகளை வீணடித்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு இதுவே கடைசி தொடராக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரின் முதல் போட்டியில் 27 மற்றும் 29 ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது போட்டியிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதோடு கடைசியாக அவர் விளையாடிய 13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதத்தை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவரது பேட்டிங் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் இருந்துள்ளன.

இதையும் படிங்க : அது என்னோடது ப்ரதர்.. நல்லவேளை நீங்க பவுலரா வரலைன்னு சொன்னேன்.. விராட் கோலி பற்றி ஷமி

மேலும் இந்த இங்கிலாந்து தொடரில் அவர் இனிவரும் போட்டிகளில் சந்திப்பினால் நிச்சயம் இதுவே அவருக்கு கடைசி தொடராக அமைய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட்டில் சதத்திற்கு மேல் சதம் அடித்து வரிசையாக இளம் வீரர்கள் காத்திருக்கும் வேளையில் இனியும் அவருக்கு வாய்ப்பு வழங்குவது கடினம் என்றே தெரிகிறது.

Advertisement