அது என்னோடது ப்ரதர்.. நல்லவேளை நீங்க பவுலரா வரலைன்னு சொன்னேன்.. விராட் கோலி பற்றி ஷமி

Mohammed Shami 2
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மூன்று வகையான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக இதுவரை 26000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ள அவர் 80 சதங்கள் அடித்து சச்சினுக்கு நிகராக நிறைய சாதனைகளை படைத்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக ஜொலித்து வருகிறார்.

அந்த வகையில் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை தாண்டி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர் உலகிலேயே ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாகவும் மற்ற வீரர்களுக்கு உத்வேகத்தைவும் கொடுப்பவராகவும் திகழ்கிறார். அதை விட களத்தில் மிகவும் ஆக்ரோசமாக செயல்படக்கூடிய அவர் எதிரணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்து வம்பிழுத்தால் அதற்காக அசராமல் தக்க பதிலடி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

வேடிக்கையான குணம்:
அந்த வரிசையில் இந்திய பவுலர்கள் சாதாரணமாக ஒரு விக்கெட் எடுத்தால் கூட அதை விராட் கோலி எதிரணி பேட்ஸ்மேன்கள் முன்பாக வெறுப்பாகும் அளவுக்கு வெறித்தனமாக கூச்சலிட்டு காற்றில் தாவி ஆக்ரோஷமாக கொண்டாடுவார். அவ்வாறு அவர் கொண்டாடுவது மற்ற வீரர்களுக்கும் உத்வேகத்தை கொடுத்து இந்திய அணியின் வெற்றிகளில் மறைமுக பங்காற்றுகிறது என்றும் சொல்லலாம்.

இந்நிலையில் விக்கெட் விழுந்தால் அதை தம்மைப் போன்ற பவுலர்களை விட விராட் கோலி தான் அதிக வெறித்தனமாக கொண்டாடுவார் என்று முகமது ஷமி கூறியுள்ளார். அதனால் நல்லவேளையாக நீங்கள் பவுலராக வரவில்லை என்று விராட் கோலியிடம் நேரடியாக சொல்லி கலாய்த்ததாக தெரிவிக்கும் ஷமி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விக்கெட் கிடைத்ததும் பவுலரை விட விராட் கோலி தான் அதிகமாக அதை அதிகமாக கொண்டாடுவார். அப்படி அவர் கொண்டாடும் சமயங்களில் நான் நல்ல வேளையாக நீங்கள் பவுலராக வரவில்லை என்று சொல்வேன். அவர் அப்படி கொண்டாடுவதை மகிழ்ச்சியாக கருதுகிறார். அது தான் அவர் விளையாடும் ஸ்டைலாகும். அது அவருடைய இயற்கையாகும். எனவே அதை நிறுத்த விரும்பினால் கூட அவரால் கொண்டாடாமல் இருக்க முடியாது”

இதையும் படிங்க: அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்.. 2012 ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கேவை சாய்க்க போட்ட திட்டம் பற்றி பேசிய கம்பீர்

“ஒருமுறை விக்கெட் விழுந்ததற்காக ஸ்டம்ப்புக்கு மேலே செல்லும் அளவுக்கு காற்றில் தாவிக் கொண்டாடிய புகைப்படத்தை விராட் கோலியிடம் காட்டிய நான் “பிரதர் என்ன இது? அது என்னுடைய விக்கெட்” என்று சொன்னேன். அதற்கு அவர் இதை மறந்து விடுங்கள் என்று சொல்லி சிரித்து விட்டு சென்றார்” என கூறினார். இந்த நிலையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ஷமி ஆகிய இருவருமே விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement