
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் தொடர் என்பதனால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. அதோடு இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போதைய நிலையிலேயே மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி விட்டது.
அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இந்திய டி20 அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி எதிரணிக்கு பயத்தை வரவைக்கும் அளவிற்கு விளையாடி வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி ஒரு சாம்பியன் அணி. பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலுமே நமது அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போட்டியில் வெற்றி பெறுவது என்பதை தாண்டி எதிரணிகளுக்கு பயத்தை அவர்கள் விதைத்து வருகிறார்கள். ஏற்கனவே நடப்பு சாம்பியனாக டி20 உலக கோப்பை தொடருக்குள் இந்திய அணி செல்ல இருக்கும் வேளையில் இந்த தொடரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் – விவரம் இதோ
வெற்றி பெறுவதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தற்போது இந்திய அணி மிகச் சிறப்பான அணியாக இருந்து வருகிறது. ஆனாலும் டி20 உலக கோப்பை தொடர் என்பது நமக்கு மிக முக்கியமான தொடர் அதை கைப்பற்றும் அனைத்து தகுதிகளும் இந்திய அணிக்கு இருப்பதாகவும் சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.