இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
நியூசிலாந்து தொடரில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது வரும் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டியில் இடம்பெறாத திலக் வர்மா எஞ்சியுள்ள 2 போட்டியிகளில் இருந்தும் வெளியேறியுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளில் திலக் வர்மா விளையாடவில்லை என்பதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கடைசி 2 போட்டியிலும் திலக் வர்மா விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து இந்திய அணியுடன் பயணிப்பார் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின் போது ஹைதராபாத் அணிக்காக விளையாடிய திலக் வர்மா வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட திலக் வர்மா இன்னும் காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதனாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அவரை பாத்து நீங்க விளையாடி அவுட் ஆவாதீங்க.. சஞ்சு சாம்சனுக்கு அறிவுரை வழங்கிய – அஜின்க்யா ரஹானே
எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக இடம் பிடித்திருக்கும் அவர் முழு உடற்தகுதியுடன் அந்த உலகக் கோப்பை தொடரில் இடம்பெற வேண்டும் என்பதனாலே இந்த நியூசிலாந்து தொடரில் இருந்து திலக் வர்மா விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.



