அவரை பாத்து நீங்க விளையாடி அவுட் ஆவாதீங்க.. சஞ்சு சாம்சனுக்கு அறிவுரை வழங்கிய – அஜின்க்யா ரஹானே

Rahane and Samson
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் துவக்க வீரராகவும், துணை கேப்டனாகவும் கம்பேக் கொடுத்திருந்தார். ஆனால் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை இந்திய அணி 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கியது. அதோடு ஏற்கனவே அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான செயல்பாட்டை துவக்க வீரராக வெளிப்படுத்தி வந்ததால் அவரையே உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்தது மட்டுமின்றி நியூசிலாந்து தொடரிலும் விளையாட வைத்து வருகிறது.

சஞ்சு சாம்சனுக்கு அறிவுரை வழங்கிய : அஜின்க்யா ரஹானே

ஆனால் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்று வரும் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளிலுமே அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு பதிலாக இஷான் கிஷனை விளையாட வைக்கலாம் என்ற பேச்சும் தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த அளவிற்கு சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஃபார்ம் தற்போது சரிவினை சந்தித்துள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் அவர் டக் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் தன்னுடைய இயல்பான பாணியில் விளையாட வேண்டும் என்றும் அவர் அபிஷேக் சர்மாவை பார்த்து அவரைப் போன்று ஆட முயற்சிக்கக் கூடாது என இந்திய அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே அவருக்கு சில அறிகுறிகளை வழங்கியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : எதிர்முனையில் அபிஷேக் சர்மா ஆடுவதை பார்த்துவிட்டு நானும் அதே போல் ஆடுகிறேன் என விரைவாக ரன் குவிக்க ஆசைப்பட்டு சஞ்சு சாம்சன் தற்போது நெருக்கடியை சந்தித்துள்ளார். அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே ரன்கள் வரும். உள்ளூர் போட்டிகளில் எவ்வாறு விளையாடினாரோ அதே போன்று சர்வதேச போட்டியிலும் ஆட வேண்டும்.

இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங்கின் அந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.. அபிஷேக் சர்மா – அளித்த பேட்டி

தன்னை மற்றொரு வீரருடன் ஒப்பிட்டு அவர் விளையாடினால் அது சரியானதாக இருக்காது. எனவே அவருடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் அவரால் மீண்டும் நல்ல பார்மிற்கு திரும்ப முடியும் என அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement