ரவி சாஸ்திரி சாதித்ததை போல இம்முறை இவர் இந்திய அணிக்காக சாதிப்பார் – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

Ravi Shastri Sunil Gavaskar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது சூப்பர் ஃபோர் சுற்றில் அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்விகளால் அந்த தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்ற தற்போது முனைப்பு காட்டி வருகிறது.

Bhuvneshwar Kumar

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக மோதவுள்ளது. அதற்கு பிறகு ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்லும் இந்திய அணியானது டி20 உலக கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அப்படி இந்திய அணி அறிவிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்த உலகக் கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் வீரர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த டி20 உலக கோப்பையில் ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்காக அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்.

Hardik Pandya 2

கடந்த 1985 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ரவி சாஸ்திரி ஆல் ரவுண்டராக இந்தியாவிற்கு சாதித்தது போல் ஹார்டிக் பாண்டியாவால் நிச்சயம் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ரவி சாஸ்திரி அந்த தொடரில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். ‘

- Advertisement -

அதேபோன்று பாண்டியாவும் இந்த டி20 உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சின் மூலம் அணிக்கு வெற்றியை பெற்று தர முடியும். அதுமட்டுமின்றி அவர் பீல்டிங்கிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அனைத்துமே இந்தியாவிற்கு பலமாக திரும்பும்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு தற்போதே கிடைத்த வரவேற்பு – வியக்க வைக்கும் தகவல்

1985-ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி எவ்வாறு செயல்பட்டாரோ அதேபோன்று இம்முறை ஹார்டிக் பாண்டியா செயல்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement